ஆண்டுக்கு ஒருமுறை காணாமல் போகும் அதிசய முருகன் கோவில்..!

Video Description

தாமிரபரணி ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள ஓர் குறுக்குத்துறை முருகன் கோவில் ஆண்டிற்கு ஒருமுறை என 300 ஆண்டுகளாக நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசயம் இன்றளவும் நிகழ்கிறது. எத்தகைய வெள்ளம் ஏற்பட்டாலும் கோவிலுக்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும். வெள்ளப்பெருக்கு சமயங்களில் சுமார் 40 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் வரும். ஆகவே அந்த சமயங்களில் உற்சவர் சிலை மற்றும் உண்டியல் மட்டும் கரையில் இருக்கும் மேல் கோவிலில் கொண்டு வந்து வைக்கப்படுகிறது. எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்த போதிலும் மூலவர் முருகப் பெருமான் மங்காத கலை அம்சத்துடன் காட்சி தந்து அருள்கிறார். கோவிலை சுத்தம் செய்தபின் உற்சவர் சிலையை கொண்டுவந்து வைப்பார்கள். எத்தகைய வெல்லத்தையும் சமாளிக்க காரணமாக இருப்பது இக்கோவிலின் வடிவமைப்புதான். படகின் முன்பகுதி நீரைக் கிழித்துச் செல்லும் வகையில் கூர்மையாக இருப்பதைப் போல இக்கோவிலின் முன்பகுதி படகு போன்ற வடிவமைப்புடன் கூர்மையான முனையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் வெள்ளம் வருகையில் பொங்கி வரும் நீரை கிழித்தபடி நிலையாக நிற்கிறது. முன்னோர்களின் ஞானத்திற்கும் கட்டிடக்கலை நுட்பத்திற்கும் இக்கோவில் மிக சிறந்த சான்றாகும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.