மீன், பறவைகள், முயல் என அணைத்து செல்ல பிராணிகளும் கிடைக்கும் ஒரே

Video Description

செல்லப்பிராணிகளை வாங்குவதற்கு சிறந்த இடம் மூர்மார்க்கெட் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் மூர்மார்க்கெட்டை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் ஆனால் இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அது தான் அல்லிகுளம் வளாகம் இது ஒரு வணிக வளாகம் என்பதால் இங்கு ஏராளமான பொருட்கள் விற்கப்படுகின்றன அதிலும் பெரிய அளவில் புத்தகங்கள் பழங்காலத்து பொருட்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் என இருக்கின்றன இங்கு நம்மை கவர்ந்தது இங்கு வளர்க்கப்படும் மீன்கள் முயல்கள் பறவைகள் இவைகள் அனைத்தும் ஒரே கடையில் கிடைக்கின்றன இதேபோன்று இந்த கடைகளை சுற்றி ஏராளமான கடைகள் இருக்கின்றன எங்கும் வண்ண மீன்கள் பறவைகளும் கிடைக்கின்றன இவர்கள் இங்கு மீன்களை மட்டும் விற்காமல் அதற்கு தேவையான மீன் தொட்டி அலங்கரிக்கும் கற்கள் என அனைத்தும் விற்கிறார்கள் இது மட்டுமல்லாமல் பறவைகள் கிளிகள் மற்றும் அவற்றுக்கும் கூண்டுகள் விற்கிறார்கள் அதற்கு தேவையான உணவையும் இவர்கள் பல இடங்களில் இருந்து வரவழைத்து விற்கிறார்கள் இந்த கடை உரிமையாளரின் தந்தை தான் இங்கு இருக்கும் மீன்களின் தொட்டியை தயாரிக்கிறார் ஆனால் நவீன தொட்டியை மட்டும் வெளியூர்களில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள் இதை தவிர்த்து இங்கு இருக்கும் மீன்கள் பெரும்பாலும் சென்னை ரெட்டேரி கொளத்தூர் போன்ற இடங்களிலிருந்து வர வைக்கப்படுகிறது இங்கே நமக்கு தேவையான கூண்டுகள் மற்றும் தொட்டிகளை நம் விருப்பத்திற்கு ஏற்ற அளவில் செய்து தருவார்களாம் இதை தவிர்த்து இங்கே நாம் பணம் செலுத்துவதற்கு அதிக வசதிகள் இருக்கின்றன இணையதளம் மூலமாகவும் செய்யலாம் எனவே எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் வீட்டில் மீன்கள் புறாக்களை வளர்க்க வேண்டுமென்றால் சென்னையில் அமைந்திருக்கும் இந்த மூர்மார்க்கெட் வந்தீர்கள் என்றால் நிச்சயம் திருப்தியுடன் செல்வீர்கள். பறவைகள் / புறா / மீன்கள் / உணவு / கூண்டு / விலை / மலிவு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.