இந்திய சினிமாவில் மோகன்லால் ஒரு மையில் கல் - சூர்யா.!

Video Description

மோகன்லாலை புகழ்ந்து தள்ளிய சூர்யா கே. வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “காப்பான்” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா மோகன்லாலை புகழ்ந்து தள்ளிவிட்டார் அது சாதாரண புகழ்ச்சி மட்டுமல்லாமல் தான் அவருடன் இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள மோகன்லால் மலையாளத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவார் இவர் தமிழில் கடைசியாக “ஜில்லா” படத்தில் நடித்திருந்தார் அதற்கு முன்பு கமல்ஹாசனுடன் இணைந்து “உன்னைப்போல் ஒருவன்” என்ற படத்தில் நடித்து ஒரு புதுவிதமான அனுபவத்தை அவர் ரசிகர்களுக்கு தந்தார் இந்த வகையில் இப்போது நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கும் மோகன்லாலை சூர்யா வெகுவாக புகழ்ந்துள்ளார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர் போல் இல்லாமல் சக நடிகராக மிகவும் எளிமையாக இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நமக்கென்று ஒரு சுதந்திரத்தையும் அவர் தந்தார் “ஆர்யா” “சாயிஷா” போன்ற நடிகர்களுடன் எப்படி இருந்தேனோ அதே போன்று தான் மோகன்லால் அவர்களுடன் இருந்தேன் அந்த அளவுக்கு உரிமை தந்தார் என்னதான் சக மனிதராக இருந்தாலும் நடிப்பு என்று வரும்பொழுது அவர் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தார் நாங்கள் அனைவரும் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றால் போல் நடித்தோம் என்று தன்னடக்கத்துடன் ஒப்புக்கொண்டார் இந்தப் படத்தில் நடிப்பது மூலம் மோகன்லாலின் நட்பு கிடைத்தது என்பது ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன் என்று அவரை பற்றி புகழ்ந்துரைத்தார். காப்பான் / இசை வெளியீட்டு விழா / சூர்யா / மோகன்லால் / கே வி ஆனந்த்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.