மேல் மலையனுரில் உள்ள சக்திவாய்ந்த அங்காள அம்மன் கோவில்..!

Video Description

மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவில் கோவில்கள் என்றாலே நாம் பல மலைகளைக் கடந்து உயரத்திற்கு ஏரிதான் வணங்கி வருகிறோம் இப்படிப்பட்ட ஒரு இடம்தான் மேல்மலையனூர் பெயரில் இருப்பது போல் ஏகப்பட்ட மலைகளை கடந்து அங்கு இருப்பதிலேயே உயரமான மலை ஏறுவதினால் இந்த ஊரை மேல்மலையனூர் என்கிறார்கள் இந்த ஊரில் சிறப்பான ஒரு கோவில் இருக்கின்றன அது என்னவென்றால் அங்காள அம்மன் கோவில் இங்கு அங்காளம்மனை வழிபடுவதற்காக தினமும் லட்சக்கணக்கானோர் வருகிறார்கள் இந்த கோவிலை சுற்றி ஏகப்பட்ட கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் இருக்கின்றன இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கிராமத்தில் இருக்கும் மக்களே இந்த கோவிலை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார்கள் இதைத்தவிர்த்து இதன் அருகில் இருக்கும் அனைத்து கடைகளும் இவர்களுக்குள் ஏற்பாடு செய்து இதில் வரும் பணத்தை கிராமங்களை மற்றும் கோவில் பராமரிப்புக்கு பயன்படுத்துகிறார்கள் இவ்வளவு ஒற்றுமையாக இந்த இடத்தைப் பராமரிப்பது மட்டுமல்லாமல் இந்த இடத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் பார்த்துக்கொள்கிறார்கள் இதைத் தவிர்த்து இந்த கோவிலில் இருக்கும் பூசாரிகள் கூட இந்த ஊர் மக்களில் இருப்பவர்கள்தான் இவர்கள் மற்ற கோவில்களில் இருக்கும் பிராமணர்களை வைத்து பூஜை செய்வதில்லையாம் இந்த கோவிலில் நடுவே ஒரு கர்ப்பிணி அம்மன் இருக்கிறார் இவர் கர்ப்பமாக இருக்கும்போது இங்குதான் உறங்கினார் அப்படியே இருப்பதுபோல் இந்த இடத்தில் ஒரு சிலை உருவாக்கப்பட்டு வணங்கி வருகிறார்கள் இவர் மிகவும் சக்திவாய்ந்த ஒரு கடவுள் ஆகும் இந்த இடத்தில் கோவில் மட்டுமல்லாமல் சுற்றி ஏகப்பட்ட கருவாடு கடைகளும் இருக்கின்றன இங்கு வரும் பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்துக் கொண்டு இங்கு கிடைக்கும் சிறப்புமிக்க கருவாடுகளையும் வாங்கி செல்கிறார்கள் நீங்களும் மேல்மலையனூருக்கு வருபவர்களாக இருந்தால் நிச்சயம் இங்கே இருக்கும் சிறப்புகளை அனுபவித்து இருப்பீர்கள். மேல்மலையனூர் / கோவில் / அங்காளம்மன் / சக்தி / வாய்ந்த / கடவுள் / கருவாடு / மயில் / இறகு / பூஜை

@@include("partials/call_to_action.html") @@include("partials/footer.html") @@include("partials/base_scripts.html")