சுண்டைக்காயின் அற்புத மருத்துவ குணங்கள்..!

Video Description

சுண்டைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் நாம் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ளாத ஒரு பொருள் தான் சுண்டைக்காய் ஒரு காலத்தில் இந்த சுண்டைக்காய் வத்தல் மூலமாக குழம்பு வைப்பது அதில் மூலமாக கூட்டு பொரியல் செய்து கொண்டு இருந்தனர் ஆனால் இப்போது பெரும்பாலான வீடுகளில் சுண்டைக்காய் சமையலே இருப்பதில்லை ஒரு சிலருக்கு சுண்டக்கை என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறார்கள் இப்படி இருக்கும் இந்த சுண்டைக்காயின் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது நமது உடம்பில் இருக்கும் ரத்த அழுத்தத்தை இது சமநிலைக்குக் கொண்டு வருகிறது அது மட்டும் அல்லாமல் நம் ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை சேரவிடாமல் தடுக்கிறது இது நம் உடம்பில் இருக்கும் வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது இதில் இரும்புச்சத்து கீரைகளில் இருப்பதைவிட அதிக அளவு இருக்கிறது யாருக்காவது காய்ச்சல் இருக்கும் நேரங்களில் இதை அவர்களை சாப்பிட செய்தால் காய்ச்சல் உடனடியாக குணமடையும் அது மட்டுமல்லாமல் நம் உடம்பில் ஏதாவது பகுதியில் காயங்களோ புண் போன்றவைகள் இருந்தால் இதை சாப்பிடுவதன் மூலமாக அது வெகு விரைவில் குணமடையும் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதன் மூலமாக அவர்களுக்கு மட்டும் இல்லாமல் அவர்கள் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் ஆரோக்கியம் தரும் இதுவே குழந்தை பிறந்த பின்பு இதை சாப்பிட்டால் அவர்களுக்கு தாய்ப்பால் அதிக அளவு சுரக்க உதவும் எனவே இந்த சிறிய காயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன மாதத்திற்கு ஒரு முறையாவது சுண்டக்காயில் ஏதாவது சமைத்து சாப்பிடுவதன் மூலமாக நம் குடும்ப ஆரோக்கியத்திற்கு நல்லது. சுண்டைக்காய் / மருத்துவ குணம் / ஆரோக்கியம் / ரத்த அழுத்தம் / வெள்ளைஅணுக்கள் / இரும்புச்சத்து / கர்ப்பிணி பெண்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.