உடல்நலம் காக்கும் முடக்கத்தான் கீரை; எப்படி....?

Video Description

மூட்டு வலியை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் குணம் கொண்ட முடக்கத்தான் கீரை. இந்தியாவில் சுமார் 65 சதவிகித மக்கள் மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர் இதில் 85 சதவீதம் பெண்கள் அதிகளவு பாதிப்படைகிறார்கள். நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை மூட்டுவலிக்கு இயற்கையிலேயே மிகச்சிறந்த மருந்து இதுதான். முடக்கற்றான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இன்றி மூட்டு வலிகள் குணமாகும். முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை இந்திய ஆராய்ச்சியாளர் குழுவினரும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர் .இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து வடிகட்டி சீறுநீர்பை இருக்கு எடுத்து சென்று விடுமாம். சிறுநீரை உடனடியாகக் அழித்து விடாமல் நாம் அடக்கி வைத்துக் கொள்கிறோம். இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை யாரும் அறிவதில்லை .நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் இது உடலின் பிற பகுதிகளுக்கு சென்றுவிடுகிறது. அவ்வாறு செல்லும் போது ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிரிஸ்டல்ஸ் மூட்டுகளில் படிந்து விடுகிறது. இது சிறு சிறு கற்களாக சினோரியல் மெம்கிரேம் எந்த இடத்தில் தந்துவிடுகிறது. இது பல வருடங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை ,கால் ,முட்டிகளில் அதிக வலி இருக்கும் இது தான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை. முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து தோசை செய்து சாப்பிடலாம் .கீரையைக் கொதிக்க வைத்து சாப்பிடக்கூடாது. கொதிக்க வைத்தால் மருத்துவ சத்துக்கள் அழிந்துவிடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரையை எண்ணெயில் காய்ச்சி மூட்டுவலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும். முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால் கீல் பிடிப்பு கீல் வாதம், கால்களை நீட்டி மடக்க முடியாமல் இருப்பது நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.இக்கீரையை கருவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்பந்தமான நோய்கள் எல்லாம் குணமாகும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.