தல அஜித்-ஷாலினியின் காதல் கதை..!

Video Description

அஜித் ஷாலினி காதல் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகர் அஜித் இவர் அமர்க்களம் படத்தின் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தாலும் இந்த படத்தில்தான் தனது வாழ்க்கை துணையை சந்தித்துள்ளார் அவர்தான் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி காதலுக்கு மரியாதை, அமர்க்களம், அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என்ற படங்களில் நடித்துள்ளார் இவரும் நடிகர் அஜித்குமார் எப்படி காதல் வயப்பட்டார்கள் என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம் அமர்க்களம் படத்திற்க்காக அஜீத் குமாரை தேர்ந்தெடுத்த இயக்குனர் சரண் அடுத்து ஷாலினியிடம் கதையை கூறியுள்ளார் ஆனால் ஷாலினி திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க போகிறேன் என்று கூறிய நிலையில் அஜீத் அவர்கள் நேரடியாக ஷாலினியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் இதனால் வேறு வழியில்லாமல் ஷாலினி அஜித் மேல் உள்ள மரியாதையினால் அமர்க்களம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் ஒரு சண்டைக் காட்சியில் அஜீத் அவர்கள் கத்தியை தூக்கி எரிந்துள்ளார் அந்த கத்தி ஷாலினியை தாக்கி உள்ளது இதனால் படபடப்பான அஜித் அந்த படப்பிடிப்பு தளத்தை அதிர வைத்துள்ளார் அவர் கத்திக் கூச்சல் போட்ட நிலையில் அருகில் உள்ள அனைத்து மருத்துவர்களும் அந்த இடத்திற்கு வந்துள்ளார் இப்படி அதிகமாக பாசத்தை காட்டியுள்ளார் அஜித் ஒரு நாள் படப்பிடிப்பில் அஜித் குமார் அவர்கள் ஷாலினியை காதலிப்பதாக கூறும் காட்சி படம் எடுக்கப்பட இருந்தது இந்த நேரத்தில் அவர் ஒரு பூங்கொத்தை ஷாலினிக்கு பரிசாக அளிப்பார் இதனைக் கேள்விப்பட்ட அஜய் தனது பணத்தில் பூங்கொத்தை வாங்கி கொடுத்துள்ளார் இந்த சமயத்தில் ஷாலினியின் அப்பா அவர்கள் யாருக்கு இந்த பூக்கள் என்று கேட்ட கேள்விக்கு அஜித் பயந்துகொண்டு இது நடிகர் மாதவன் அவர்கள் தனது காதலிக்காக வாங்கியது என்று சமாளித்துள்ளார் இதே போல் அஜித்தின் பிறந்த நாளன்று சரண் அவர்கள் அஜித்தை தொடர்புகொண்டு ஷாலினியை பேச வைத்துள்ளார் அப்போது அவர் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது கதவைத் திறந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் அஜித்ம் கதவைத் திறந்தவுடன் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார் ஏனென்றால் அவருக்கு பிடித்த அனைத்தும் அவர் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ளார் நடிகை ஷாலினி எனவே இத்தகைய அழகான சில சம்பவங்களை அக்காலத்தில் இவர்கள் நிகழ்த்திதான் காதலித்து வலுவான குடும்பமாக இன்றுவரை விளங்குகிறார்கள் இன்றைய ஷாலினி அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடுவதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஷாலினி / அமர்க்களம் / அஜித் / திருமணம் / காதல் /கொ ண்டாட்டம் / குடும்பம் / மகிழ்ச்சி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.