70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர்வாழும் துறவி..!

Video Description

மெஹ்சானா மாவட்டம் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஓர் துறவி 70 ஆண்டுகளாக உணவு தண்ணீரின்றி காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் அரிய தகவல் இப்போது நீங்கள் இந்த வீடியோவில் பார்க்கலாம். மெஷ்சானா மாவட்டம் சரோட் கிராமத்தைச் சார்ந்தவர் பிரஹலாத் ஜனி இவரது வயது 88 வயது ஆகிறது சிவப்பு நிற உடை அணிந்த இவர் மாதாஜி என அழைக்கப்படுகிறார் கடந்த 70 ஆண்டுகளாக உணவு நீரின்றி காற்றை மட்டுமே சுவாசித்து வாழ்வதாக இவரை பார்த்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் அதிசயம் அடைகிறார்கள் கடந்த 2010ஆம் ஆண்டில் நம் நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் டிஆர்டிஓ மற்றும் ராணுவ உடற்கூறியல் அமைப்பு இணைந்து இவரை கண்காணித்தது.பிரஹலாத்தை 15 நாட்கள் தங்கவைத்து தீவிரமான கண்காணிப்பில் வைத்திருந்தார்கள் அதன்பிறகு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது அவர் உணவு நீர் உட்கொள்ள வில்லை என உறுதி செய்யப்பட்டது .ஆனால் கடவுளின் அருளால் தான் தனக்கு சக்தி கிடைப்பதாக பிரஹலாத் கூறுகிறார். நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள் கூட இவரின் ஆசிரமத்திற்கு சென்று ஆசி பெற்றுள்ளனர்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.