ரத்த தானம் கொடுக்கிறீங்களா? எதை செய்யலாம்? எதை செய்யக் கூடாது?

Video Description

ரத்த தானம் மிகச் சிறந்த செயல். ரத்தத்திற்கு மாற்று வேறெதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை,கண்டுபிடிக்கவும் முடியாது. நீங்க ரத்த தானம் செய்தால், அடுத்த 24 மணி நேரத்திற்குள், நீங்கள் இழந்த திரவத்தை உடல் மீட்டு விடும். அடுத்த சில வாரங்களீல் இழந்த ரத்த செல்களை உடல் பெற்று விடும். ரத்த தானம் செய்யும் போது நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்றால்... ரத்ததானத்திற்கு ஒரு துணையுடன் செல்லுங்கள். உங்களுக்கு உடல் நலம் சரியில்லையென்றால், ரத்த தானம் தரக் கூடாது. ரத்த தானம் தருவதற்கு முன் கொழுப்பு குறைவான உணவுகளையே சாப்பிட வேண்டும். ரத்த தானம் தருவதற்கு ஒரு நாள் முன்பு மற்றும் கொடுத்த மறு நாள், நிறைய கஞ்சி, பழச்சாறு போன்ற திரவ ஆகாரங்கள் குடிக்க வேண்டும். ரத்த தானம் கொடுத்த உடனேயோ ல்லது அடுத்த 1 மணி நேரத்திற்கோ, புகை பிடிக்கக் கூடாது. ரத்த தானம் கொடுத்த உடனேயே ஜூஸ் அல்லது, பிஸ்கட், குக்கிஸ் சாப்பிடக் கூடாது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.