காஷ்மீரை ஆண்ட கடைசி மன்னர்..!

Video Description

பாக்கிஸ்தானில் இருக்கும் லாகூரைத் தலைநகராக கொண்டு ஆணவர் ராஜா ரஞ்சித் சிங். அவரது படையில் ஒரு சாதாரண வீரனாகப் பணியாறியவர் குலாப் சிங். இந்த குலாப் சிங்தான் டோக்ரா வம்சாவழியைத் தோற்றுவித்தவர்.இந்த ரஞ்சித் சிங்கின் வழிவந்த ஹரி சிங்தான் 1947ல் காஷ்மீரை ஆண்ட கடைசி மன்னர். வழக்கமான இந்திய மகாராஜாக்களைப் போல இல்லாமல் , குடிகளிடம் கட்டாயமாக வேலை வாங்கும் வழக்கத்தை ஒழித்தார்.கல்லூரிகள்,பள்ளிகள் திறந்தார். இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு முன்மாதிரியாக கோவில்களை தலித் ( அப்போது ஹரிஜன் என்று அழைக்கப் பட்டார்கள்) மக்களுக்குத் திறந்து விட்டார். காஷ்மீரில் ஒரு பெரியார். எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது.அவருக்கு இந்தியாவுடன் இணைய விருப்பமெல்லாம் இல்லை.எனக்கு மதம் கிடையாது.'எனது மதத்தின் பெயர் நீதி' என்று அறிவித்து இருந்தார். அவரை மாற்றியது பலூச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்த பக்டூன் என்கிற இன மக்களின் தலைவர்கள். இப்போது பலூச்சிஸ்தான் பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் அதன் தலைவர்கள் தனியாட்சிதான் நடத்துகிறார்கள்.அப்போதும் அப்படித்தான்.அவர்கள் காஷ்மீரின் மீது படையெடுத்தார்கள்.ராஜா ஹரி சிங்கிடம் அவர்களோடு மோதுமளவுக்கு படைபலம் இல்லை.அதனால் ஹரிசிங் 1947ம் வருடம்.அக்டோபர் மாதம் 26ந்தேதி இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார் அந்த ஒப்பந்தத்தின் படி காஷ்மீர் தனி நாடகவே இருக்கும்,ஆனால் இந்தியாவை சார்ந்திருக்கும். தேர்தல் நடத்தி காஷ்மீருக்கு தனி பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்றெல்லாம் பேச்சு வார்த்தைகள் நடந்தன.இது அன்றைய காஷ்மீரின் சுதந்திரப் போராட்டத் தலைவராக இருந்த ஷேக் அப்துல்லாவுக்கும் சம்மதமாகவே இருந்தது.இந்தியா பாகிஸ்த்தான் போர் முடிந்தது.காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.ஹரிசிங் விடை பெற்றார். 1950ம் ஆண்டு வரை இந்தியா பொறுமை காத்தது.அந்த ஆண்டே காஷ்மீர் ஒப்பந்தத்துக்கு சம்மதித்த ஷேக் அப்துல்லாவை கைது செய்து கொடைக்கானலில் சிறைவத்தது நேரு அரசு. இத்தனைக்கும் 1949 மே 15,16 தேதிகளில் நேரு முன்னிலையில் வல்லபாய் படேலும் , ஷேக் அப்துல்லாவும் பேச்சு வார்த்தையெல்லாம் நட்த்தினார்களாம். இதை பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை சந்தித்த வைக்கோவிடம்,' இளைய தமிழ் நண்பனே காங்கிரஸ் அகராதியில் நன்றி என்கிற வார்த்தைக்கு இடமே இல்லை' என்று நினைவு கூர்ந்தாராம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.