1000 கணக்கான செடிகள், பயோ காஸ்.. சென்னையை கலக்கும் ஜஸ்வந்த் சிங்!

Video Description

ஆயிரம் செடிகளை வைத்திருக்கும் ஜஸ்வந்த்சிங் சென்னை நாளுக்கு நாள் புகை உற்பத்தியால் மாசுபட்டு வருகின்றன இதைத் தடுப்பதற்கு நாம் அதிகளவில் மரங்கள் மற்றும் செடிகளை வளர்க்க வேண்டும் ஆனால் சென்னை மாநகராட்சி வைக்கப்படும் செடிகளில் சரியாக பராமரிக்கப்படாததால் அது விரைவில் பட்டுப் போய் விடுகிறது இதனால் ஒவ்வொரு குடிமகனும் முயற்சி எடுத்து சென்னையில் அதிகமாக செடிகள் மற்றும் மரங்களை நட்டால் தான் நாம் எதிர்காலத்தில் எந்த ஒரு பாதிப்பையும் சந்திக்காமல் இருக்க முடியும் இப்படி சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜஸ்வந்த் சிங் அவர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தனது வீட்டுத் தோட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகளை வளர்த்து வருகிறார் இவரது குடும்பம் 1938 ஆம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்து உள்ளார்கள் அதைத் தொடர்ந்து இன்றுவரை ஏகப்பட்ட செடிகள் மற்றும் மரங்களை வளர்த்து வருகிறார் ஆரம்பத்தில் ஒரே ஒரு துளசி செடியின் மூலமாக ஆரம்பித்த இவர் படிப்படியாக பூக்கள் காய்கறிகள் என ஏகப்பட்ட மூலிகை செடிகளை வளர்த்து வருகிறார் இவரிடம் 350க்கும் மேல் மூலிகைச்செடிகள் இருக்கின்றதா இவரின் வீடு முழுக்க சூரிய ஒளியின் மூலமாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார் இவர் தானாகவே வீட்டில் காய்கறிகளை தயாரிக்கிறார் இதனால் அது மிகவும் தூய்மையாகவும் ஆரோக்கியமான ஒரு உணவாக இருக்கின்றது இவர் 200 க்கும் மேற்பட்ட சந்தன செடிகளை வைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் நம் தமிழ்நாட்டு மலரான செங்காந்த மலரையும் இவர் வளர்த்து வருகிறார் வெள்ளை சக்கரையை நம் அதிகமாக பயன்படுத்தி வருகிறேம் இதனால் உடல் பாதிப்பு அடைவதை நாம் கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் இவர் சக்கரை துளசி செடி ஒன்றை வளர்த்து வருகிறார் இதிலிருந்து வெறும் நான்கு இலையை எடுத்து தேநீர் அல்லது காபியில் போட்டு குடித்தால் சாதாரண சர்க்கரையை விட 200 மடங்கு அதிக சர்க்கரையின் சுவையை இது தருகிறதாம் இதுபோன்ற இயற்கையாகவே இருக்கும் மூலிகை செடிகளை வளர்த்து பயன் பெறுவதை மறுத்துவிட்டு நாம் செயற்கையாக செய்யப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்டு நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம் எனவே இவரை போல் நாமும் வீட்டைச் சுற்றி ஏதாவது ஒன்று இரண்டு செடிகளை வளர்க்க வேண்டும் என இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை / முகப்பேர் / ஜஸ்வந்த் சிங் / மூலிகை / செடிகள் / கொடிகள் / செங்காந்த மலர்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.