தனிமையை விரும்புவாரா நீங்கள்..வந்துவிட்டது கிரோபோ ரோபோட்..!

Video Description

தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு துணையாக இருக்கும் ரோபோ ஜப்பானில் டோக்கியோ என்றழைக்கப்படும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டது தான் இந்த ரோபோ “கிரோபோ” என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த ரோபோ 2015 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்களுக்கு மேல் விண்ணில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பிய இந்த ரோபோ எப்படி சென்றதோ அப்படியே புதுசுப்போல் திரும்பவும் வந்தது இதைக் கண்டு ஆச்சரியமடைந்த ஜப்பான் மக்கள் இதுபோன்று அவர்களுக்கும் ஒரு ரோபோ வேண்டும் என்று அவர்களது கோரிக்கையை அந்த நிறுவனத்தின் முன்வைத்தார்கள் இதனால் அவர்கள் இதே போன்று சிறிய வகை ரோபோக்களை தயாரிப்பு மக்களிடம் சேர்த்தார்கள். பத்து சென்டிமீட்டர் மட்டுமே உள்ள இந்த ரோபோவை ஒரு வளர்ப்பு பிராணியைப்போல் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்கள் இதை அதிகம் வாங்கினார்கள் காரணம் இது அவர்களுக்கு ஒரு நண்பனாகவும், துணையாகவும் இருந்தது. அவர்களிடம் உரையாடுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களைப் பற்றி கலந்துரையாடல், கேள்வி கேட்புதல், அக்கறை காட்டுதல் போன்றவை செய்துள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த ரோபோவை நாம் ஏதாவது ஒரு இடத்திற்கு அழைத்து சென்றாள் அது நினைவில் வைத்துக்கொள்ளும் மீண்டும் அந்த இடத்திற்கு செல்லும்போது உங்களின் பழைய நினைவுகளை அது எடுத்துரைக்கும். இந்த ரோபோமீது உங்களுக்கும் ஆசை வந்து விட்டது அல்லவா ஆனால் இதை வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஜப்பான் மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆமாம், இந்த ரோபோ இப்போதைக்கு ஜப்பான் மொழியில் மட்டும் வெளிவந்துள்ளது மிக விரைவில் பல மொழிகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை 25000 ரூபாய். ஜப்பான் / கிரோபோ / 25000 ரூபாய் / உரையாடும் / விண்ணுக்கு அனுப்பப்பட்டது

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.