இருளப்பசாமி சித்தரின் ஜீவா சமாதி.. மக்கள் ஏமாற்றம்

Video Description

இருளப்ப சித்தரின் ஜீவசமாதி நாடகம் சிவகங்கை மாவட்டத்தில் பாசங்களை சேர்ந்த இருளப்பசாமி என்ற சித்தர் 12.09 2019 அன்று பூஜையுடன் வழிபாடு மற்றும் தியானம் செய்து ஜீவ சமாதி அடையப் போவதாக கூறியிருந்தார் அவர் 13.09.2019 அதிகாலை 4.10 மணியிலிருந்து 6 மணிக்குள் ஜீவசமாதி அடைவேன் என்று இருந்தார். இதை காண அந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருக்கும் அனைத்து மக்களும் அங்கு கூடினார்கள். ஏதோ ஒரு அதிசயத்தை காணபோகிறோம் என்று அங்கு கூடியிருந்தார்கள். இந்த இடத்திற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் “ஜெயகாந்தன்” அவர்கள் மக்களுக்காக இரவு முழுவதும் காவல்துறை பாதுகாப்பு மட்டுமல்லாமல் அவர்களுக்கு குடிநீர், மின் விளக்குகள், சாமியாருக்கு பந்தல் என அனைத்து வசதிகளும் செய்து இருந்தார் ஆனால் இதையெல்லாம் பார்த்த மக்கள் நிச்சயமாக இன்று இரவு அவர் ஜீவ சமாதி அடைந்த தரிசனத்தை நாம் பார்ப்போம் என்று நினைத்திருந்தார்கள் ஆனால் நடந்ததோ வேறு அவர் இரவு முழுவதும் ஜீவசமாதி அடைவதை போலவே செய்கைகளை செய்திருந்தார் இறுதியில் இருளப்பசாமி நான் 2045 ஆம் ஆண்டு ஜீவ சமாதி அடையப் போகிறேன் என்று சொல்லி அனைவரையும் வழியனுப்பி வைத்தார். இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இது மட்டுமல்லாமல் இதைப் பற்றி அவருடைய மனைவி “இவரைப்போல் நம்புகிறீர்கள்” என்பது போல் பதிலளித்து சென்றுவிட்டார். அவரது மகன் காலை ஆனவுடன் தலைமறைவாகி விட்டான். இதை எதுவுமே பொருட்படுத்தாமல் இரவு முழுவதும் மக்களை சிரிக்க வைத்த இருளப்பசாமி அதிகாலை 6 மணி கடந்தவுடன் உறங்கினார். இதைப்பற்றி திண்டிவனத்தில் இருந்து வந்திருக்கும் சித்தர்களின் ஆய்வாளர்களிடம் சில கேள்விகளை கேட்டோம் அந்த பதில்களும் இந்த காணொளியில். இருளப்பசாமி / சித்தர் மகன் / ஏமாற்றம் / ஆட்சியர் ஜெயக்குமார் / இரவு / முழுவதும் கண் விழிப்பு / ஜீவ சமாதி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.