பாம்பன் பாலத்தைப் பற்றி சுவராஸ்யமான தகவல்கள்!

Video Description

இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தப் பாம்பன் பாலத்தின் மொத்த நீளம் 2.3 கிலோ மீட்டர். பழைய வரலாற்று புத்தகத்தின் படி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஷத்திரிய வம்சத்தை சேர்ந்த மக்களால் இந்த பாலம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது .18,000 டன் ஜல்லி 5000 டன் சிமெண்ட் 18,000 டன் இரும்பு ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தை கடலில் எழுப்பப்பட்டுள்ள 145 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. பாலம் கட்டப்பட்டுள்ள இடம் உலகிலேயே இரண்டாவதாக அதிக துருப்பிடிக்கும் இடமாகும். இன்றுவரை வலிமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. 1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புயல் தாக்கியபோது கூட இந்தப் பாலத்தின் இரும்பு பகுதி சேதமடைந்தது போக்குவரத்து சில காலம் தடைப்பட்டது பின்னர் 45 நாட்களில் பாலம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. பாக் ஜலசந்தி கடலையும் மன்னார் வளைகுடா கடலையும் இணைக்கிறது. பாம்பன் கடல் இதன் நடுவில் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் பாலம் அமைந்துள்ளது. இயற்கையாக கால்வாய் அமைந்துள்ளது இதன் வழியாக கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்புவரை ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகங்களில் இருந்து உள்நாட்டு துறைமுகங்கள் மற்றும் இலங்கைக்கு போக்குவரத்து நடைபெற்று உள்ளது. கீழே கப்பலும் மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 இல் டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது இதற்காக 1902 ஆங்கில அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது வர்த்தக போக்குவதற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. ராமேஸ்வரத்திற்கு பேருந்து பாலம் முதல் முதலாக இரண்டாம் தேதி அக்டோபர் 1988 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இப்படிக்கு இந்திரா காந்தி பேருந்து மேம்பாலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது மேம்பாலத்தில் இருந்து அருகில் உள்ள தீவுகளையும் பாலத்தில் செல்லும் தொடருந்து பாலத்தை காணமுடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாம்பன் பாலத்திற்கு 100 வயதுக்கு மேல் ஆகிறது. 2014 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது பழந்தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் பாம்பன் பாலத்தை இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்க என வாழ்த்துவதும் இதனைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.