மகாபாரதம் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்..!

Video Description

மகாபாரதம் நிஜம் என்பதற்கான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகளை இப்போது இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். மகாபாரதம் இவ்வுலகில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கருவாய் கொண்டு உலகையே உலுக்கிய மாபெரும் போர் எற்பட காரணமான கதை.. ஆசான்களை அவமானப்படுத்துதல் பெண்மையை சூறையாடுதல் வினை விதைப்பவன் விதிப்பயன் தீய இடத்திலிருந்தும் நற்குணம் கொண்டவனின் கதி என வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் என்ன செயல் செய்தால் அவனுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை உணர்த்தும் இதிகாசம். இப்போது அறிவியல் பூர்வமாக மகாபாரதம் ஈடு இணையில்லா உண்மை சரித்திரம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மகாபாரதம் கடந்த காலச் சுவடு மட்டுமல்ல அது நிகழ்காலத்தின் விதை எதிர்காலத்தின் கரு என நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. நாம் காணவிருக்கும் சம்பவங்களும் முன்பே மகாபாரதத்தில் கூறப்பட்டவை என்பது நம்மில் எத்தனை பேர் அறிவோம். மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள அரச வம்சங்களில் 50க்கும் மேற்பட்ட வம்சங்கள் இந்தியாவில் ஆட்சி செய்த பதிவுகள் கல்வெட்டுக்கள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகாபாரதத்தில் கண்ணன் கூறிய கூற்றுக்கள் நிகழ்காலத்தில் நம் கண்முன்னே கண்டவை ஆயிரம் வருடங்களுக்கு முன் கூறிய கூற்றுக்கள் இப்போது நிகழ்கிறது என்பதை எப்படி கதையாக இருக்க முடியும். மகாபாரதத்தில் கிருஷ்ணனின் துறைமுக நகரமாக கூறப்பட்டுள்ள துவாரகா நகரம் தற்போது குஜராத் மாநிலத்தின் துறைமுகப் பகுதியில் கடலின் அடியில் கண்டறியப்பட்டுள்ளது இதிகாசத்தில் கூறியவாறே அந்த துறைமுக நகரில் கோட்டைகளும் படகு நிறுத்தும் பகுதிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பண்டைய காலத்து நகரங்களில் 35க்கும் மேற்பட்ட நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகிறது.அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் ஆயுதங்கள் நாணயங்கள் பாத்திரங்கள் முத்திரைகள் மற்றும் சுடுமண் பொருட்கள் இவை யாவும் அந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணரின் வம்சாவழிகள் இருந்து வந்த 138 ஆவது அரசன் தான் சந்திரகுப்த மவுரியர். குறிப்புகளில் கிரகங்கள் பற்றிய தன்மையும் விளக்கப்பட்டுள்ளது அவற்றால் ஏற்படக் கூடிய காலநிலை மாற்றங்களும் மனிதர்களின் மத்தியில் ஏற்பட போகும் நிலை மாற்றங்கள் பற்றியும் மிகத் தெளிவாக வியாசர் கூறியுள்ளார் .வானசாஸ்திரம் மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து மகாபாரதம் உண்மையான சம்பவமே என்பது எல்லோருக்கும் புரியும் அல்லவா.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.