அகத்தியர் மாமுனி பற்றிய அறிய தகவல்கள்..!

Video Description

அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும் சித்தர்களில் முதன்மையானவர் ஆகவும் அறியப்படுகிறார் .சிவபெருமானின் திருமணத்தைக் காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால் அவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன் செய்ததாக ஓம் சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும் தமிழில் சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழ் இலக்கண நூலை எழுதியவர் எனினும் இந்நூல் கிடைக்கப்பெறவில்லை .தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார் அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபா முத்திரை ஆகும். இவருக்கு மாதவ முனிவர் தமிழ் முனிவர் மா முனி குருமுனி என பல பெயர்கள் உண்டு. பதினெட்டு சித்தர்களில் முதல் சித்தராக இவர் கருதப்படுகிறார். அகத்தியமலை அல்லது அகத்திய கூடம் என்பது தென் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை முடியாது இதன் உயரம் சுமார் ஆயிரத்து 868 மீட்டர்கள் நிலையத்தின் ஒரு பகுதி இது தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது தாமிரபரணி ஆறு இம்மலையில் தோன்றி திருநெல்வேலி மாவட்டத்தில் ஊடாகப் பாய்கிறது இம்மடல் அகத்திய முனிவரின் பக்தர்கள் புனித தலமாக கருதப்படுகிறது மலை முகட்டில் ஒரு சிறிய கோயில் அமைந்துள்ளது. சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றதாக செவிவழிச் செய்திகள் உள்ளது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறனால் வென்றார். அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில் பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் கூறப்பட்டுள்ளது. அகத்தியர் மூல மந்திரம் சொல்வதின் மூலம் நான் எல்லாவிதமான பாவங்களிலிருந்தும் நிவர்த்தி பெறலாம். ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே சாப பாவ விமோசனம் ரோக அகங்கார துர் விமோட்சனம் சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் சற்குருவே ஓம் அகஸ்திய கிரந்த கர்த்தாய நம இந்த மந்திரத்தை தினமும் கூறுங்கள். என்ன மாற்றம் என்பதை எங்களிடம் பகிருங்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.