தமிழ்நாட்டில் ஒன்று தான்.. கர்நாடகா-வில் மூன்று..!

Video Description

பல போராட்டங்களுக்கு பின் ஜூலை 26-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் முதல்வராகியுள்ளார் எடியூரப்பா. முதல்வரான அடுத்த நாள் முதல் பிஜேபி தலைமையில் இருந்து தொடர்ந்து கட்டளைகள் வந்த வண்ணம் இருந்தது, எவ்வித மறுப்பும் இல்லாம் அனைத்தையும் செய்து வந்த எடியூரப்பா-விற்கு துணை முதல்வர்கள் நியமனம் குறித்த கட்டளைகள் விடப்பட்டது. இதை மறுக்க முடியாத எடியூரப்பா பரிந்துரையின் படி கர்நாடக மாநில ஆளுநர் வஜுபாய் வாலா இன்று (திங்கள்கிழமை) மூன்று முதல்வர்களை நியமித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி 17 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். எனினும், கடந்த ஒரு வார காலமாக அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், அந்த 17 பேரில் முதல்வர் எடியூரப்பா பரிந்துரையின் பேரில் கோவிந்த் கர்ஜோல், சி.என். அஷ்வத் நாராயண் மற்றும் லக்ஷ்மன் சாவடி ஆகியோரை துணை முதல்வர்களாக நியமித்து ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூவரும் வெவ்வேறு சமுகத்தை அதாவது பிற்படுத்தப்பட்ட சமூகம், vokkaliga மற்றும் லிங்காயத் சமுகத்தை சார்ந்தவர்கள். இது தவிர, மீதமுள்ள 14 அமைச்சர்களுக்கு திங்கட்கிழமை இலாகாவும் ஒதுக்கப்பட்டது. ஒரு மாநிலத்திற்கு 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டது இது தான் முதல் முறை. அதிலும் கார்நாடகாவில் இது வரலாற்று நிகழ்வு.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.