கண் திருஷ்டி விலக என்ன செய்ய வேண்டும்?

Video Description

கண் திருஷ்டியில் இருந்து விலகுவதற்கு நாம் செய்ய வேண்டியவை கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி மட்டும் படக் கூடாது என்று பழமொழி நாம் பலமுறை கேட்டிருப்போம் இதற்கு முழு அர்த்தம் என்னவென்றால் ஒருவர் நம்மை கல்லால் அடித்தால் கூட அந்த காயம் சில நாட்களில் ஆறிவிடும் ஆனால் அவரே நம்மை தாக்கினால் அதாவது நம் வாழ்க்கையைப் பற்றி அவர்கள், இவர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று அவர்கள் மனம் கஷ்டத்துடன் நம்மை புகழ்ந்தால் நம் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே இல்லாமல் போய்விடும் இதைதான் கண்ணடி என்பார்கள். இது மிகவும் மோசமான ஒன்றாகும் இதை நாம் எப்படி சமாளிப்பது என்பதை இந்த காணொளியில் பார்க்கலாம். நாம் முன்னால் வாழ்ந்த வாழ்க்கையையும் இப்போது வாழும் வாழ்க்கையையும் ஒன்று சேர்த்து இவர்கள் பெரும் வளர்ச்சி அடைந்து விட்டார்கள் என்று பலபேர் நம் கண்முன்னே பேசுவார்கள் இதுதான் கண் திருஷ்டியின் அஸ்திவாரம் இதைத் தடுப்பதற்காக நம் வீட்டின் வாசலில் மஞ்சள் துணியால் கல் உப்பை கட்டி தொங்கவிட வேண்டும் இதை நாம் தேவைக்கேற்ப வாரம் ஒரு முறையோ இல்லை மாதத்துக்கு ஒரு முறையோ உப்பை மாற்றி வரலாம் உப்பு பொதுவாக குழந்தைகளுக்கு கண் திருஷ்டி படாமல் இருக்க சுத்தி போடுவதற்கு உதவியாக இருக்கும். இதை நாம் வீட்டில் உபயோகப்படுத்தும் உப்புகளால் செய்யக்கூடாது கடலில் இருந்து எடுக்கப்பட்டு அதை முழுமையாக பயன்படுத்துவதற்கு முன் இருக்கும் கல் உப்பை தான் பயன்படுத்த வேண்டும். இதை வீட்டில் கட்ட முடியாதவர்கள் ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பைக் கொட்டி வீட்டிற்கு உள்ளே வைக்கவேண்டும் இதை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும் அப்படி செய்யாதவர்கள் வீட்டு வாசலை திறந்தவுடன் எதிரே பெரிய கண்ணாடியை வைக்க வேண்டும் இது வீட்டிற்குள் நுழைபவர்கள் வீட்டைப் பற்றிப் பேசுவதற்கு முன்பே அவர்கள் கண்ணாடியின் தெரியும் விம்பத்தை பார்த்து விடுவதினால் அதில் இருக்கும் எதிர்வினை சக்தி எந்த எதிர் சிந்தனைகளும் நம் வீட்டிற்குள் நுழையாமல் பார்த்துகொல்லும். கண்ணாடியின் பாதரசம் ரசவாத சக்தி இருப்பதினால் எந்தத் தீய சக்திகளும் நம் வீட்டிற்குள் அனுமதிக்காது. கண் திருஷ்டி / உப்பு / கின்னம் / கண்ணாடி / தீமை / மகிழ்ச்சி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.