கலப்படம் இருந்தா ஈஸியாக கண்டுபிடிக்கும் வழி!!

Video Description

உடல்ல ஆரோக்கியமான வச்சுக்கனும்னு ஹெல்தியா சாப்பிடறோம். அதுக்காக பார்த்து பார்த்து வாங்கின பொருட்கள் எல்லாம் கலப்படமா இருந்தா நம ஆரோக்கியத்துக்காக செய்யற்தெல்லாம் வீணாகும். அதனால முன்னெச்செரிக்கையா நாம வாங்குற உணவுப் பொருள்ல கலப்படம் இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்னு இந்த வீடியோல பாக்கலாம். சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும். மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி மற்றும் நிறம் சேர்க்கிறாங்க... நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும். ஐஸ் கிரீமில் வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும். ஆனால் கலப்படம் இருந்தால் தனிதனியாக இருக்கும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.