ஐயப்பனுக்கு மாலை போட்டு எவ்வாறு விரதத்தை கடைப்பிடிப்பது?

Video Description

சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் விரத விதிமுறைகள் என்னவென்று விரிவாக இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஐந்து அல்லது ஏழு முறை மாலையணிந்து மலைக்கு சென்ற வரும் ,ஐயப்பனின் விரத முறையை நன்கு உணர்ந்தவராகவும், பொறுமையும், ஆர்வமும் நிறைந்தவராகவும், இருக்கும் ஒரு நபரை தான் நாம் குரு சாமியாக ஏற்று தாய் தந்தையரை வணங்கி குருவின் கையால் மாலையை அணிய வேண்டும். அவரவர் வசதிக்கேற்ப குருவிற்கு தட்சணை கொடுத்து குருவின் அனுக்கிரகத்தை பெறவேண்டும். கொடுக்கும் தட்சனை ஒரு ரூபாய் என்றாலும் குரு ஐயப்பனே தந்ததாக அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிதல் வேண்டும். ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதம் இருத்தல் மிகவும் அவசியம். காலை உணவை தவிர்த்து மதிய உணவை ஐய்யப்பனுக்கு நிவேதனம் செய்து உண்ண வேண்டும் . மாலை பால், பழம் உண்ணலாம். விரதகாலத்தில் மிக இறுக்கமான பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும். மனதளவில் கூட பெண்களை நினைத்துப் பார்க்கக் கூடாது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்வில் ஈடுபடக்கூடாது. மனதால் ஐயப்பனை மட்டும் நினைத்து அவன் பாதம் சரணடைய வேண்டும். ருத்ராட்சம் அல்லது துளசி மாலை 54 அல்லது 108 மணிகள் உடையதாக வாங்கி அதில் ஐயப்பன் பதக்கம் ஒன்றை சேர்த்து அணிதல் வேண்டும். துணைமாலை ஒன்றையும் சேர்த்து அணிதல் வேண்டும். கருப்பு ,நீலம் பச்சை நிறமுள்ள ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். கன்னி சுவாமிகள் கருப்பு மட்டும் தான் அணிய வேண்டும். காலை மாலை குளிர்ந்த நீரில் குளித்து விட்டு ஐயப்பனுக்கு துளசி பால், பழம் கற்கண்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனம் செய்து 108 சரணம் சொல்லி வழிபட வேண்டும் . விரதகாலத்தில் முடிவெட்டிக் கொள்ளுதல் ,முக சவரம் செய்தல் கூடாது .காலணி ,குடை ,மழைக்கு போடும் கவசம் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் மது அருந்துதல் கூடாது. பொய் பேசுதல், மாமிசம் உண்ணுதல், கோபம் கொள்ளுதல், கடும் சொற்களைப் பேசுதல் என்பன கூடவே கூடாது. விரதகாலத்தில் எவருடன் பேசினாலும் பேசத் தொடங்கும்போது சுவாமி சரணம் என்று கூறவேண்டும். மாலை அணிந்து விரதம் பூர்த்தி ஆகும் எக்காரணம் கொண்டும் அதை கழற்றக் கூடாது. நெருங்கிய உறவினர்கள் இறந்து தீட்டு ஏற்பட்டால் மாலையை கழற்றி ஐயப்பன் படத்தில் போட்டுவிட வேண்டும். பின்னர் மறுவருடம் தான் மாலை அணிய வேண்டும். விரத காலத்தில் பகலில் தூங்கக்கூடாது. இரவில் பாய் தலையணை தவிர்த்து வஸ்திரத்தை விரித்து தான் தூங்கவேண்டும். மாதவிலக்கான பெண்களை பார்ப்பது அவர்கள் தயாரிக்கும் உணவை உண்பதும் கூடாது மாதவிலக்கான பெண்களை அறியாமல் பார்க்க நேர்ந்தால் நீராடி 108 சரணம் கூறி வழிபட வேண்டும். யாத்திரை புறப்படும் போது இருமுடியை தலையில் தாங்கி வீட்டுவாசலில் ஐயப்பனை பிரார்த்தித்துவிட்டு தேங்காயை உடைத்து விட்டு சரணம் சொல்லி போய் வருகிறேன் என்று எதுவும் கூறக்கூடாது திரும்பிப் பார்க்காது செல்ல வேண்டும். நாளை போட்ட சாமிமார்கள் அதிலும் கன்னிசாமி மார்கள் மிகவும் கண்டிப்பாக பெருவழிப் பாதையில் செல்ல வேண்டும். யாத்திரை நிறைவு பெற்றதும் குருநாதர் மூலம் மாலையை கழற்றி ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு அணிவித்துவிட்டு ,ஐயப்பனை பாடி துதித்து விரதத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.