ஆசனங்களால் தைராய்டை குணப்படுத்துவது எப்படி?

Video Description

உடல் நலம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று நாம் நோய்க்கு இரையாகாமல் துன்பத்தை அனுபவிக்காமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாசனம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். யோகாசனம் செய்வதால் உற்சாகம் கிடைக்கும் .தூக்கம் சோம்பல் என்று எது தலை தூக்கினாலும் அதை விரட்டி அளிக்கக்கூடிய ஒரு மந்திரமாக யோகாசனம் இருக்கும். சோம்பல் என்று சொல்லும்போதே நினைவுக்கு வருவது தைராய்டு இது சரியல்ல நமது உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகமாகவோ குறைவாகவோ உற்பத்தி செய்வதே தைராய்டு நோய்க்கு அடிப்படைக் காரணம். அயோடின் குறைபாட்டால் சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது குறை தைராய்டு என்று அழைக்கப்படுகிறது மற்றும் மன அழுத்தமும் தைராய்டு சுரப்பிகளைச் சரியாக வேலை செய்யாமல் முடக்கிவிடும்.தைராய்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது .ஆனால் ஆசனங்களைத் தொடர்ந்து செய்து வருவதால் நல்ல முன்னேற்றம் காணலாம். எனவே நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன்பு யோகாவையும் சேர்த்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் .என்ன ஆசனம் செய்தால் தைராய்டு பிரச்சனை போகும் என்று முடிவாகச் சொல்லிவிட முடியாது .தொண்டையில் பிரச்னை என்பதால் தொண்டைக்கான ஆசனங்களைப் பரிந்துரைக்கிறோம் .உடல் எடை வயது உடலின் தன்மையை வைத்து அவர்களால் எந்த அளவு ஆசனம் செய்ய முடியுமோ அதன்படி ஆசனங்களில் சிறிய மாற்றங்கள் செய்து செய்தாலே போதும் .தைராய்டு நோயாளிகள் அபாசனம் விபரீதகரணி சர்வாங்காசனம் இந்த மூன்று ஆசனங்களையும் செய்தால் போதும். இதில் குறிப்பாக சர்வ அங்க ஆசனம் அதாவது சர்வாங்காசனம் பெயருக்கேற்ப உடலின் அனைத்து அங்கங்களையும் சீராகிவிடும் ஆசனம் இது செய்ய தரையில் மல்லாந்து படுக்க வேண்டும் பின் படுத்த நிலையிலேயே மூச்சை வெளியிட்டு இரு கால்கள் மற்றும் முதுகு ஆகியவற்றைச் செங்குத்தாக தூக்கவேண்டும் கைகளால் இடுப்பைத் தாங்கி பிடித்துக்கொள்ளவும் சுவாசம் இயல்பாக இருக்க வேண்டும் .மேலிருக்கும் இரு கால் கட்டை விரல்களையும் பார்க்க வேண்டும் .கீழ்த்தாடை பகுதி நெஞ்சை ஒட்டியிருக்க வேண்டும். கழுத்துப் பிடரி சரியாகத் தரை விரிப்பில் படிந்திருக்க வேண்டும் முதுகெலும்பு நேர்க்கோட்டில் இருக்க வேண்டும் இந்த நிலையில் ஒரு நிமிடம் இருக்க வேண்டும் சுவாசம் நார்மலாக இருக்கட்டும் .மூச்சை உள்ளிழுத்துக் கால்களை நிதானமாக இறக்கவும். முதுகெலும்பை இறக்கிப் படுத்த நிலையில் திரும்பவேண்டும் .ஆரம்ப நிலையில் இந்த ஆசனம் 3 நிமிடம் செய்தாலே போதும் செல்ல நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். சராசரியாக இந்த ஆசனத்தை தினமும் ஒரு முறை செய்தால் போதும் தைராய்டு பிரச்சனை எளிதில் நீங்கும். உணவு உண்ட 2 மணி நேரம் கழித்துத்தான் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும் அதை என்றுமே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.