மகரம் ராசிக்கு 2020 எப்படி இருக்கப்போகிறது?

Video Description

2020 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு பற்றி அனைத்து ராசிக்காரர்களுக்கும் நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கலாம்.2020 சந்தோஷமான ஆண்டாக அமைய வேண்டும் என்று அனைத்து ராசிக்காரர்களும் விரும்புகின்றனர். சில ராசிக்காரர்களுக்கு சங்கடங்களும் ,கவலைகளும் சூழ்ந்திருக்கிறது. நமக்கு விடிவுகாலம் எப்போது பிறக்கும் என்று யோசிப்பீர்கள். உங்களின் கேள்விகளுக்கு இந்த புத்தாண்டு பதில் சொல்லப்போகிறது .சனியின் சஞ்சாரம் குருவின் கோச்சார ரீதியா ன சஞ்சாரமும் அவர்களின் சொந்த வீடுகளில் அமைந்திருப்பதால் 12 ராசிகளுக்கும் பலன்கள் அபரிமிதமாக கிடைக்கப் போகிறது. இதில் இன்று கடக ராசிக்கு 2020 எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோவில் நாம் பார்க்கலாம். சனி பகவானை இராசி நாயகனாக கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகின்ற புத்தாண்டு தினத்தில் சங்கடங்களையும் சில நேரங்களில் சந்தோஷத்தையும் தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. ஏழரைச்சனியின் தாக்கம் ஜென்ம சனியாக தொடர்கிறது. அத்தோடு குருவும் விரய குரு ,ஜென்ம குரு என உங்களை சில நேரங்களில் கஷ்டப்படுவார் .உங்களின் விடாமுயற்சி வெற்றி தரும். அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண்கள் ,பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் பெண்கள் ஆண்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். மாணவர்கள் கொஞ்சம் கவனமாக படிப்பது மிகவும் நல்லது. மன அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது.ஆலய தரிசனம் அவசியம் செய்ய வேண்டும். தொழில் வியாபாரிகள் அதிக முதலீடுகள் செய்வதை தவிர்த்து விடுதல் மிகவும் சிறப்பு.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.