கண்ணை நோண்டி.. கொடூரமான ஆணவக் கொலை.. அதிரடி தீர்ப்பு..!

Video Description

கேரளாவில் கெவின் ஜோசப் கொலை சம்பவம் ஒட்டுமொத்த தென் இந்தியாவையும் உலுக்கியதை நாம் மறந்திருக்க முடியாது. இந்த ஆணவக் கொலை வழக்கில் கோட்டயம் நகராட்சி அமர்வு நீதிமன்றம் 10 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. என்ன நடந்தது..? கோட்டயத்தில் உள்ள கல்லூரியில் படித்த ஒரு காதல் ஜோடிதான் கெவின் ஜோசப் - நீனு. 24 வயது இளைஞர் கெவின் ஒரு தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். ஆதிக்க சாதி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர் நீனு. வீட்டில் விஷயம் தெரிந்து எதிர்ப்பு. அதனால் கோட்டயத்தில் உள்ள ஒரு துணை பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மே 25-ம் தேதி ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து கொண்டனர். இதை கேள்விப்பட்டு, நீனுவின் வீட்டில் கொதித்து போய்விட்டனர். கெவின் வீட்டுக்கு அடியாள்களை அனுப்பி சூறையாடியதுடன், கெவினையும், அவரது நண்பர் அனிஷையும் கடத்தி சென்றனர். முதலில் அனீஷை அடித்து கொன்றுவிட்டு, போகிற வழியில் வீசிவிட்டனர். இதனிடையே மே 28 அன்று கொல்லம் ஆற்றில் கெவினின் சடலத்தை கைப்பற்றியது போலீஸ். உடம்பெல்லாம் ரத்த காயங்கள். இரும்பு கம்பி, மரத்தடிகளால் அடிக்கப்பட்ட தடயங்கள் காணப்பட்டன. ஒரு கண்ணை காணோம். தோண்டி எடுத்துள்ளனர். அவரது அந்தரங்க உறுப்பு கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தது. துடித்து துடித்தே கெவின் இறந்துள்ளது உறுதியானது. இது ஒரு ஆணவ கொலை என்பதால் உடனடியாக வழக்கு நடைபெற துவங்கியது. இந்த ஆணவ கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்கு பதிவாகி, 10 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லை.. ஒவ்வொரு குற்றவாளிக்கும் 40, ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆணவ கொலை விவகாரம் என்பதால் ஆறே மாதத்தில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.