நெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்..!

Video Description

சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரியாகிவிடும் .ஆனால் நெஞ்சு சளி அறிகுறிகள் உடனே தெரிவதில்லை மூச்சுக்குழாய் அழற்சி அல்லது பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகப்படியான இருமல் வரும்போது தான் நெஞ்சில் சளி கட்டி இருப்பதே நமக்கு தெரியவரும் நெஞ்சுசளி நிறத்தை வைத்தே அதனுடைய ஆரம்ப நிலையா அல்லது முற்றிய நிலையில் என்பதை நாம் கண்டுபிடித்து விடலாம் பொதுவாக நெஞ்சு சளி நிறம் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது நெஞ்சு சளி ஆரம்பம் என நாம் அறிந்து கொள்ளலாம் என்பதைப் பெரும்பாலும் இதை வைத்து கணித்து விடமுடியும். நெஞ்சு சளி வந்தால் கூடவே இருமல் மூக்கடைப்பு உடல் சோர்வு என அனைத்தும் வந்து சேர்ந்துவிடும். தேங்காய் எண்ணெயை சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து அந்த எண்ணெயை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும் சிறிது குணம் தெரிந்த உடன் விட்டுவிடக்கூடாது தொடர்ந்து தடவி வந்தால் நாள்பட்ட நெஞ்சுச் சளியும் எளிதில் குணமாகும். நாள்பட்ட நெஞ்சுச் சளியை எளிதில் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் தான் சுலபமாக நீக்க முடியும் இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை குணமாக சில நாள் எடுக்கும் சத்தியத்தை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் பக்க விளைவுகள் இல்லாதது தான் இந்த இயற்கை மருத்துவ முறை சுடுநீரில் இட்டு நன்கு கலக்கி பின் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் உங்களுக்கு நெஞ்சு சளி மிக எளிதில் கரையும். நம் பாட்டி வைத்தியத்தில் கூறியபடி தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பாலில் சிறிது மஞ்சள் தூளையும் கலந்து ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் நெஞ்சு சளி குறையும். மஞ்சள் சேர்க்கும்போது ஒரு மிளகு ஒரு பல் பூண்டு கூடி தட்டிப் போட்டு குடிக்கலாம். நெல்லிக்காய் சாறில் மிளகுத்தூள் கலந்து இரண்டையும் சேர்த்து கலந்து குடித்து வந்தால் சளி மூக்கடைப்பு நீங்கும் புதினா இலை மிளகு இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி இருமல் நுரையீரலில் உள்ள கோளாறுகள் அனைத்தையும் நீக்கக்கூடிய சக்தி இதற்கு உண்டு. இதுக்கு அதிக துளசி இலையை மென்று அதன் சாற்றை விழுங்கினால் சளி நம்மை விட்டு வெகு தூரத்திற்கு சென்று விடும். அதேபோல கருந்துளசி இலைகளை குடிநீரில் நன்கு கொதிக்க விட்டு அந்த நீரை கசாயமாக தொடர்ந்து குடித்து வந்தாலும் நெஞ்சுசளி அகன்றுவிடும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.