இயற்கை அழகை விரும்புவாரா நீங்கள்..கண்டிப்பா இந்த இடத்திற்கு போங்க

Video Description

கரோல் திப்பாவின் இயற்கை அழகு இமாச்சல பிரதேசத்தில் கரோல்லா என்ற கிராமத்தில் உள்ளது இந்த அழகிய இடம் முழுக்க முழுக்க வனப்பகுதியாக கருதப்படும் இந்த இடம் மலையைக் குடைந்து செய்யப்பட்ட சாலைகளை நாம் பார்க்கலாம், அதுமட்டுமல்லாமல் நாம் செல்லும் வழிகளில் பல வீடுகள் உள்ளது இங்கே பல வருடங்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கையால் சூழப்பட்ட இந்த இடம் இயற்கையை விரும்புவர்களுக்கு, மலையேறும் சாகசம் செய்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். இயற்கை சூழலில் நடுவே இங்கு பல கோவில்களும், ஆலயங்களும் இருக்கின்றன இதை இங்கு வாழும் மக்களே கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். மலை ஏறுபவர்களுக்கான பலவிதமான பாதைகள் இந்தக் காட்டில் உள்ளது. பொதுவாக இமாச்சல பிரதேசத்துக்கு வருபவர்கள் இந்த இடத்திற்கு நிச்சயமாக வருவார்கள் அதிலும் சாகசம் செய்ய விரும்பும் இளைஞர்கள் அதிகமாக இங்கு காணப்படுகிறார்கள் அதற்குக் காரணம் இங்கே சாகச மலையேறுதல் மட்டுமல்லாமல ஏறும்போது பல இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பார்கள். இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு மலையேறிய பின் உச்சியில் நின்று இதை சுற்றி பார்க்கும் பொழுது நம் ஏறி வந்த களைப்பு எல்லாம் காற்றில் பறந்து போகும், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பச்சையாகக் காணப்படும் இந்த இயற்கை அழகு காட்சிகளை பார்ப்பதற்கு இதுவே சிறந்த இடம் நம் வாழ்வில் ஒரு தடவையாவது சென்று பார்க்கும் இடங்களில் இதுவும் ஒன்று. மலையேறும் சாகசம் / இளைஞர்கள் / இயற்கை அழகு / மலையைக் குடைந்து

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.