அல்சரை குணப்படுத்தும் ஒரு சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்...!

Video Description

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகள் செரிப்பதற்கான நமது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரக்கிறது. இந்த அமிலமானது நமது வயிற்றில் அதிகமாக சுரப்பதால் இரைப்பை மற்றும் சிறுகுடலின் சுவர்களில் இருக்கும் மியூக்கோஸா எனும் படலத்தை சிதைக்கிறது. இதனால் இரைப்பையில் தீராத வலி குடல் புண் ஏற்பட்டு அதுவே அல்சராக மாறுகிறது. காலை உணவை தவிர்ப்பது அல்லது நேரம் தாழ்த்தி உண்பது இதுபோன்ற சில முக்கிய காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. எனவே அல்சரை குணப்படுத்த கூடிய தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி நாம் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம். வாழைத் தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதை சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்து தினமும் குடித்துவர வேண்டும். இதனால் அல்சர் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது. அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தங்களது உணவில் கொத்தமல்லியை அதிகமாக சாப்பிட வேண்டும் .ஏனெனில் இது அல்சர் உள்ளவர்களுக்கு நல்ல டானிக் ஆக உள்ளது .மேலும் கொத்தமல்லி பசியை தூண்டி பித்தத்தை குறைத்து காய்ச்சல் சளி இருமல் மூலம் வாதம் நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகவும் உள்ளது. வல்லாரைக் கீரையை அதிக அளவு சேர்த்துக் கொள்வதன் மூலம் அல்சர் பிரச்சனைகள் இருந்து நாம் விடுதலை அடையலாம். அரைக் கீரையை பச்சையாக தினமும் இரண்டு வேளை இவர்கள் சாப்பிட வேண்டும். தினமும் சாப்பிடும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை அதிக அளவு சாப்பிட்டு வருவதால் அல்சர் ரத்த அழுத்தம் இருமல் ஆஸ்துமா காய்ச்சல் போன்ற பிரச்சனைகளின் பக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். இக்கீரையை தினமும் சமைத்து சாப்பிடுவதன் மூலம் வாய்ப்புண் வயிற்றுப்புண் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக உள்ளது மேலும் இந்த கீரை ஜீரண கோளாறுகள் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் புற்றுநோய் ஈரல் கோளாறு தோல் வியாதிகள் போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாக உள்ளது பச்சை வாழைப்பழம் வயிற்று உபாதைகள் மற்றும் புண்களை போக்க கூடிய தன்மை கொண்டது எனவே அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு பச்சை வாழைப் பழத்தை சாப்பிடுவதால் விரைவில் அல்சர் நோயிலிருந்து விடுதலை அடையலாம். அல்சரை குணப்படுத்த வேப்பிலை, குப்பைமேனி, வெந்தயம், அருகம்புல் கடுக்காய் ,அத்தி இலை ,மிளகு, சுக்கு புதினா ,கொத்தமல்லி ,நன்னாரி மணத்தக்காளி, சுண்டைக்காய் பெருங்காயம் ,மஞ்சள், வசம்பு ,சீரகம் மாதுளை, அகத்திக்கீரை இவற்றை பொடி செய்து காபிக்கு பதில் இந்த பவுடரை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் குடித்து குடித்து வர அல்சர் குணமாகும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.