வலிமையான எலும்புகளைப் பெறுவதற்கான வழிகள்!

Video Description

எலும்புகள் தான் உடலின் ஆதரவு அமைப்பு எலும்புகள் உருவாக்குவதும், உடைப்பதும் ஒரு தொடர்ச்சியான செயல். ஒரு வாழ்க்கை முறைதான் எலும்புகளை உருவாக்கும் செயல்முறை எலும்புகளை வலுவாக வைப்பதில் முக்கிய பங்கை வைக்கிறது .எனவே உங்களின் ஆரோக்கியமானது உங்களது கையில்தான் உள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. நீங்கள் அடிக்கடி மூட்டு இணைப்புகளில் வலியால் அவதிப்பட்டு வந்தால் உங்கள் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இல்லை என்று அர்த்தம் இந்நிலையில் நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கை முறை உணவு பழக்க வழக்கங்களில் அடங்கும். எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தவும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை நான் இங்கு உங்களுக்காக தொகுத்து கூறுகிறேன். அவற்றை நீங்கள் நினைவில் கொண்டு நடந்தால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடையலாம். எலும்புகளின் வலிமைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் மிகவும் முக்கியமான சத்து. கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருள் என்றால் அது பால் . இரண்டு டம்ளர் பாலில் ஒரு நாளைக்கு தேவையான போதுமான அளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. யோகர்ட், சீஸ் போன்றவை சிறப்பான உணவுப் பொருட்களாகும். எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மட்டுமின்றி வைட்டமின் டி சத்தும் அத்தியாவசியமாகும்.இதில் வைட்டமின்கள் போதுமான அளவு நிறைந்துள்ளது. வைட்டமின் டி சத்தானது முட்டையின் மஞ்சள் கருவில் தான் அதிக அளவில் நிறைந்துள்ளது. உப்பு உடலில் இருந்து கால்சியத்தை வெளியேற்றும் ஒரு மோசமான உணவுப் பொருள் .அளவுக்கு அதிகமாக உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் வழியாக கால்சியம் உடலில் இருந்து வெளியேறும். ஆகவே நீங்கள் உங்கள் எலும்புகளை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் விரும்பினால் உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். சிறிய நீர் எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க ஊட்டச்சத்தை தருகின்றனர் சால்மன் போன்ற எலும்புகளுக்கும் ஊட்டசத்து வழங்கும் சிறப்பான உணவாகும். மீனில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளதால் எலும்பு இழப்பை தடுக்கும். எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் உணவாக இதை நாம் எடுத்துக்கொள்ளலாம். வேர்க்கடலை மற்றும் பாதாம் போன்றவற்றில் புரோட்டீன் மற்றும் இதர எலும்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய சத்துக்கள் உள்ளது. வால்நட் மற்றும் ஆளி விதை போன்றவற்றில் எலும்பை வலுவாக்க கூடிய ஒமேகா-3 கொழுப்புகள் உள்ளது. பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்தில் நேரடிப் பங்கு வகித்தாலும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. நடுநிலையாக இது பயன்படுகிறது எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுப் பொருட்களான சர்க்கரை வள்ளிக்கிழங்கு , உருளைக்கிழங்கு வாழைப்பழம் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.