கோவைக்காய் இலை எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது..!

Video Description

கோவக்காயின் இலைகள் தண்டு வேர் ,காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. தோல் நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் இலைகளுக்கு உண்டு. கோவக்காய் இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும், வலியை குறைக்கும். இலை தண்டு கஷாயம் மார்புச்சளி சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு மிக சிறந்த மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள் பிற தோல்நோய்களை மீது தடவி வர தோல் நோய் குணமாகும். கட்டிகள் ஏற்பட்டால் அதை கரைக்கும். விஷகடிகள் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் குணமாகும். கோவை இலை, மஞ்சள் தூள் ,சிறியா நங்கை ,வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும். காலங்களில் ஏற்படும் வியர்வை குருவை தடுக்க கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி வந்தால் வியர்க்குரு வராமல் தடுக்கலாம். மேலும் கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வர நாள்பட்ட புண் குணமாகும். தாது புஷ்டியாக கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். புகையிலை மன அழுத்தப் பிரச்சினைகள் உடல்சூடு ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கோவை இலைச் சாறு சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்து இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இலைச்சாறு 10 மில்லி எடுத்து சிறுநீர் கலந்து கொதிக்க வைத்து உள்ளுக்குள் காலை மாலை என இரண்டு வேளையும் எடுத்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி ஏற்படும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.