செம்பருத்தி தேநீர் அருந்துவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!

Video Description

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பலராலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரகத்தின் பிரச்னைகளின் போது இயற்கையான முறையில் அதை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும். செம்பருத்தி இலை தேநீர் பருகும் பலருக்கு உயர் ரத்த அழுத்த அளவை குறைத்துள்ளது என தெரியவந்துள்ளது எனவே இரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக தொடர்ச்சியாக சாப்பிட வேண்டிய மருந்தாக செம்பருத்தி இலை உள்ளது. செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்கைப் பொருளாக உள்ளது இது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும் தலையில் உள்ள பொடுகுகினைநீக்கவும் பயன்படுகிறது. பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் சோர்வு களில் இருந்து விடுபடலாம் மூளைக்கு தேவையான பலத்தை கொடுக்கவல்லது பூவை உலர்த்தி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் ஊட்டம் பெறும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் உடல் பருமனடையும். இதன் இலையை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் வெள்ளை ,வெட்டை நோய் குணமாகும். இதன் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலை, மாலை குடித்து வந்தால் இதய நோய்கள் குணமாகும். அதாவது இதய பலவீனம் மார்பு வலி முதலியவை தீரும். இதன் பூவை சுத்தமாக கழுவி நெய்யில் வதக்கி பெண்கள் காலை ,மாலை சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகும். 100கிராம் பூக்களை தண்ணீரில் போட்டு பிசைந்து வடிகட்டி சிறிதளவு சர்க்கரை சேர்த்து குடித்து வர மேக வெள்ளை பிரமேகம் குணமாகும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கணைச் சூட்டை குறைக்கும். செம்பருத்தி பூ சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தினமும் தலைக்குத் தடவிவர மூளை குளிர்ச்சி அடையும். மயிர்கால்கள் உரம் பெற்று முடி கறுப்பாக வளரும். இளநரை, கண் எரிச்சல் தீரும். இச் செடியின் வேருடன் ஆடாதோடை இலை சேர்த்து கொதிக்கவைத்து கொடுக்க இருமல் தீரும் .மலராத மொட்டுக்களை உலர்த்தி இடித்து தூள் செய்து கொண்டு தண்ணீரில் கலக்கி சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் நீங்கும். நெய்யில் வதக்கி சாப்பிட ஆண்மை பெருகும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.