வேப்பம்பூவின் நோய் தீர்க்கும் குணங்கள்..!

Video Description

வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் வீதியில் மற்றும் தெருக்களில் அதிகளவு இருக்கும் மரங்களில் வேப்பமரமும் ஒன்று ஆனால் இதன் அருமை, பெருமை பலருக்கும் தெரிவதில்லை கிராமப்புறங்களில் அனைவர் வீட்டிம் வாசலிலும் இந்த வேப்பம் இலைகளை கட்டுவது மட்டுமல்லாமல் இந்த இலைகள் மூலமாக தோரணம் கட்டுவார்கள் இதற்கான காரணம் வீட்டிற்குள் எந்த ஒரு கிறுமியும் வருவதை இது தடுக்கும் என்பதற்காக தான். இப்படி இருக்கும் வேப்ப மரத்தில் பூக்கும் பூ மற்றும் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானது இது சாப்பிடுவதன் மூலம் நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை கொல்கிறது அதுமட்டுமல்லாமல் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது பசும் பால் மற்றும் தேங்காய் பாலை வேப்பம் விழுதையும் ஒன்றுசேர்த்து கொஞ்சம் பண வெல்லத்தை கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடம்பில் இருக்கும் அனைத்து பித்தமும் வெளியேறும் இதுமட்டுமல்லாமல் நம் வேப்பம் இலையின் மூலமாக சுடுதண்ணீரில் போட்டு ஆவி பிடித்தால் நம் உடம்பில் இருக்கும் கெட்ட நீர் வெளியேறுவது மட்டுமல்லாமல் கிருமிகளும் அடியோடு அழித்துவிடும் வேப்பங்குச்சி மற்றும் இலை அதன் விழுதுகள் என எல்லாவற்றிலும் ஆரோக்கியமான மருத்துவங்கள் இருக்கின்றன நமக்கு மலச்சிக்கல் போக்குவதற்கு வேப்ப இலையின் மூலமாக செய்யப்படும் தேநீரை அருந்தலாம் வேப்பம் கொட்டையை அரைத்து அதையும் காலையும் மாலையும் சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏற்படும் மூலம் அடியோடு அழிந்து விடும் என ஏகப்பட்ட ஆரோக்கியமான விஷயங்கள் இந்த வேப்பமரத்தில் இருக்கின்றன இது தானாகவே நம் வீட்டில் வளரக்கூடிய ஒரு அதிசய மரம் இதை அழிக்காமல் பாதுகாத்து ஆரோக்கியமாக இருப்பதை இந்த காணொளி நமக்கு அறிவுறுத்துகிறது. வேப்பமரம் / வேப்பம்பூ / கொட்டை / வேர் / இலை / விழுது / ஆரோக்கியம் / கிருமி / அழித்தல்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.