கைதொழில் தான் கடவுள்.. கண்ணீர் வரவைக்கும் கதை..!

Video Description

செய்யும் தொழிலே தெய்வம் நாம் எங்கு சென்றாலும் சாலை ஓரங்களில் சிறிய வகை குடிசை அமைத்து கைத்தொழில்கள் செய்து வருவார்கள் நாம் நினைத்துக் கொள்வோம் இவர் தொழில் செய்வதற்காக இந்த குடிசையை அமைத்து இருக்கிறார்கள் என்று ஆனால் உண்மை அது இல்லை இவர்கள் தங்கும் இடமே இதுதான் இவர்கள் பல ஊரிலிருந்து சில தொழில்களை கற்றுக்கொண்டு எங்கு வியாபாரம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதோ அங்கு இது போன்ற குடிசைகளை அமைத்து இவர்கள் தொழிலை செய்து வருகிறார்கள் இப்படிதான் கடந்த 30 வருடங்களாக ஒரே இடத்தில் தனது கைத் தொழிலை செய்து வருபவர் கிருஷ்ணவேணி இவர் இயற்கை குச்சிகளால் கூடைகளை பின்னி விற்கிறார் இவரின் முழு பரம்பரையும் இதே சாலையில் தான் தங்கி இந்தத் தொழிலை செய்து வருகிறார்கள் இவர்கள் வீட்டில் இருக்கும் சிறுவர்-சிறுமிகள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள் இவர்களுக்கு என்று எந்த அடையாளமும் இல்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார் இவர்கள் கையில் செய்யப்படும் இந்த பொருட்களை வாங்குவது விற்பது என்பது சிரமமாக இருக்கிறது ஏனென்றால் பெரும்பாலானோர் இதை பார்த்துவிட்டு வாங்காமல் கடந்து செல்கிறார்கள் ஆனால் இதை நம்பி தான் இவர்களின் ஒரு வேலை சாப்பாடு இருக்கிறது என்கிறார் இந்த பொருட்களை செய்வதற்கான குச்சிகளை அருகிலுள்ள காட்டிற்கு சென்று அவர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து நான்கு நாட்கள் காட்டில் உள்ள குச்சிகளை சேகரித்து இதுபோன்ற பொருட்களை செய்கிறார்களாம் இந்த பொருட்களை விற்ற பணத்தில்தான் பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகளுக்கு ஆடை புத்தகம் உணவு என அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள் இப்படி இருக்கும் இவர்களுக்கு ஏகப்பட்ட தடைகள் இருக்கிறது என்கிறார்கள் ஒரு சில நாட்களுக்கு முன்பு கார்ப்பரேஷன் அதிகாரிகள் இந்த கடை முழுக்கு இருக்கும் பொருட்களை பறிமுதல் செய்து அவர்கள் அலுவலகத்தில் வைத்து விட்டார்கள் என்று மன வருத்தத்துடன் கூறினார் பின்பு ஒரு மனிதனின் துணையுடன் அதை மீட்டு மீண்டும் இந்த இடத்தில் கடை அமைக்க ஆதரவு தந்துள்ளார்கள் என்று கூறுகிறார் இந்த கிருஷ்ணவேணி பாட்டி எனவே கைத்தொழில் செய்பவர்கள் ஏராளமான இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள் எனவே நீங்கள் ஏதாவது பொருட்களை பார்த்தீர்கள் என்றால் அது உங்களுக்கு தேவை என்றால் தாமதப்படுத்தாமல் உடனே சென்று அதற்கேற்ற விலை கொடுத்து வாங்குவது நல்லது ஏனென்றால் நீங்கள் கொடுக்கும் பணம் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கைத்தொழில் / கிருஷ்ணவேணி / 30 வருடம் / தொழில் / உழைப்பு / வருத்தம் கஷ்டம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.