கல்யாண விருந்திற்கு பில் அனுப்பிய மாப்பிள்ளை வீட்டார்..நடந்த என்

Video Description

திருமண வீட்டின் உணவு அருந்திய விருந்தாளிக்கு ரசீதை அனுப்பிய மணமகன் வீட்டார் அமெரிக்க மக்களிடையே ஒரு கலாச்சாரம் இருகின்றன அவர்கள் திருமண விருந்து அன்று எத்தனை பேர் வருகிறார்களோ அத்தனைபேர்க்கு ஏற்றார் போல் மட்டும் தான் சமைப்பார்கள். ஆம், அதை அவர்களின் பத்திரிக்கையில் குறிப்பிட்டு விடுவார்கள் அது மட்டுமில்லாமல் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு யார் வருகிறார்கள் என்பதை தொலைபேசி வாயிலாக தெரிந்து கொள்வார்கள் இப்படி இருக்கையில் ஒரு திருமண வரவேற்பில் ஒரு குடும்பத்தின் சேர்ந்த தாய் மற்றும் அவரது 16 வயதுடைய மகன் இருவரும் உணவு அருந்த சென்றிருக்கிறார்கள் அப்போது சிறுவர்களுக்கான உணவு அருந்தும் இடம் மற்றும் பெரியவர்களுக்கான உணவருந்தும் இடம் என்று தனித்தனியே இருந்திருக்கிறது இவர் மகன் 16 வயது எட்டி உள்ளதால் பெரியவர்களுக்கான இடத்தில் உணவு அருந்தலாம் என்று அங்கு இருவரும் சாப்பிட்டுள்ளார்கள் பின்பு வீட்டிற்கு வந்த பிறகு அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது மாப்பிள்ளை வீட்டார்கள் இவர்களுக்கு சாப்பிட்ட உணவுகளின் ரசீதை அனுப்பிவைத்துள்ளார்கள் அதில் உங்கள் மகன் பெரியவர்கள் சாப்பிடும் இடத்தில் உணவு வாங்கி உண்டு இருக்கிறான் ஆனால் அவனுக்கு 16 வயது ஆகி இருப்பதனால் சிறியவர்கள் சாப்பிடும் இடத்திற்கே அவனுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டிருந்த்தார் அதுமட்டுமல்லாமல் 12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான் சிறுவர்கள் என்று நான் தவறாக நினைத்துக் கொண்டேன் என்றார் ஆனால் நமது ஊரில் திருமண வரவேற்பில் சொந்தக்காரர்கள் மட்டுமல்லாமல் முன்பின் தெரியாதவர்கள் கூட பந்தியில் அமர வைத்து கவனித்து அனுப்புகிறோம் அதுவே நம் கலாச்சாரம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.