ஆரோக்கியமான கூந்தலை பெற சூப்பரான டிப்ஸ்

Video Description

வசீகரிக்கும் அடர்த்தியான ஆரோக்கியமான நீளமான கூந்தல் வேண்டும் என்பதே பெண்களின் ஆசை தொலைக்காட்சியில் பார்க்கும் விளம்பரத்தால் அது கிடைக்கும் என்று நம்புவது சரியல்ல. அவை கூந்தல் சம்பந்தமான சிக்கலை அதிகரிக்கவே செய்யும் .அப்படியானால் அலைபாயும் அழகான கூந்தலுக்கு என்னதான் வழி என்று யோசிக்கிறீர்களா? உங்கள் முடிகளை வலுவில்லாமல் மாற்றக்கூடிய காரணியாக இன்று பொடுகு உள்ளது. இந்தப் பொடுகை துரத்திவிட்டால் நமக்கு ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தல் கிடைக்கும் அல்லவா! பொடுகைப் போக்க வைட்டமின் சி மட்டுமே போதுமானது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த அருமையான ஊட்டச்சத்தை கொண்டு கூந்தல் நலன் காக்கும் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள இது சரியான நேரம் ஆரோக்கியமான வலுவான கூந்தலுக்கான உங்கள் கனவை நிறைவேற்ற கூடிய ஆற்றல் வைட்டமின் சி யை கொண்டுள்ளது. இது மயிர் கால்களை வலுவாக்கி தலை முடி வளர்ச்சியை ஊக்குவித்து எண்ணெய் பசையை உச்சந்தலையில் இருந்து அகற்றி பொடுகை நீக்குகிறது .ஆனால் வைட்டமின் சி பயன்படுத்துவது எப்படி என்று யோசிக்கிறீர்களா? இதற்கான பதில் எலுமிச்சையில் உள்ளது ஆம் பொடுகை அகற்றி உங்கள் கூந்தலுக்கு தேவையான வைட்டமின் சி யை தர எலுமிச்சை பழமே போதுமானது .தலைமுடியில் இருந்து பொடுகை நீக்கி பொலிவு மிக்க ஆரோக்கியமான கூந்தலுக்கு வைட்டமின்-சி ஆற்றலைப் பயன்படுத்த கூடிய வழிகளை இப்போது பார்க்கலாம். உங்கள் கூந்தலை எலுமிச்சை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும் ஒரு எலுமிச்சம்பழம் 83 மில்லி கிராம் வைட்டமின் சி கொண்டுள்ளது என்பதால் சுத்தமாக உச்சந்தலை மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கான மூலப்பொருளாக இதில் உள்ளது. மறுபக்கத்தில் தேங்காய் எண்ணெயை உச்சந்தலையில் நீர் தன்மையை அழித்து பிளேகிங் பாதிப்பை குறைக்கிறது. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலக்கவும் இந்த கலவையை கொண்டு 10 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும் பின்னர் பொடுகு எதிர்ப்பு சாம்பு கொண்டு தலையை அலசவும். வாரம் ஒரு முறை இதை மேற்கொண்டு வந்தால் தலையில் பொடுகு பிரச்சனை அகன்று நீளமான கூந்தல் கிடைக்கும். அதேபோல் 2 ஸ்பூன் கடல் உப்பு பாதி எலுமிச்சை சாறு 23 ஸ்பூன் ஆலிவ் ஆயில் இவற்றை கலந்து தலையில் தேய்த்து வந்தால் தலையில் உள்ள பொடுகு நீங்கி தலைமுடி வளர உறுதுணை செய்யும். மற்றொரு முறை பொடுகு நீங்க எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும் இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடிகள் இருக்கக்கூடிய பொடுகு நீங்கி ஆரோக்கியமான கூந்தலை நீங்கள் பெறலாம்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.