பிரபல வில்லனின் சோகமான கதை..

Video Description

அம்மன் படத்தின் வில்லனின் பரிதாபநிலை ரம்யா கிருஷ்ணா, சௌந்தர்யா நடிப்பில் வெளியான அம்மன் திரைப்படத்தை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் இந்த திரைப்படம் வந்த புதிதில் ஏராளமான வரவேற்பு பெற்ற ஒரு மிகப்பெரிய வெற்றியடைந்த படமாக இருந்தது இதற்கு காரணம் அக்காலத்திலேயே அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப காட்சிகள்தான் இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வந்தவர் “ரமி ரெட்டி” இவர் இந்த படத்தில் சந்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மிகவும் பயங்கரமான ஒரு வில்லனாக மந்திர தந்திரங்களை செய்யக்கூடிய ஒரு ராட்சசனாக இந்தப் படத்தில் நடித்திருந்தார் இதை தொடர்ந்து இவருக்கு திரையுலகில் பல பட வாய்ப்புகள் கிடைத்தன இவர் 1959 முதல் ஆந்திர பிரதேசத்தில் சித்தூர் டிஸ்ட்ரிக்ட் இல் அமைந்திருக்கும் வயல்பாடி என்ற கிராமத்தில் பிறந்தார் இவர் தமிழில் கடைசியாக நெஞ்சினிலே படத்தில் நடித்திருந்தார் அதற்கு முன்பு துள்ளி திரிந்த காலத்தில் ஒரு வேடத்திலும் நடித்து இருந்தார் தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்த இவர் ஒரு படத்தை தயாரிக்கும் எண்ணத்தில் அதனுள் இறங்கி பெரும் நஷ்டத்துக்கு உள்ளாக்கினார் இதைத்தொடர்ந்து இவரால் இந்த தோல்வியில் இருந்து மீள முடியாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார் இதனால் அதிகளவில் குடிபோதைக்கு அடிமையானார் இவரின் உடல் நிலை மோசமானது கல்லீரல் மற்றும் கிட்னியும் செயலிழந்து விட்டது இதனால் இவர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்தார் இவருக்கு 2 மகன் ஒரு மகள் இருந்தும் இவர் ஒரு அனாதை போல் அடக்கம் செய்யப்பட்டார் பிரபலமாக இருந்த ஒரு நபரின் சோகமான முடிவு இவருக்கு நேர்ந்துள்ளது. ரமி ரெட்டி / ஆந்திர பிரதேஷ் / அம்மன் / வில்லன் / பரிதாபமான மரணம் / குடிப்பழக்கம் / சந்தா

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.