முக சிவப்பழகு பெற ஃபேசியல்", வீட்டிலேயே செய்யலாம்..!

Video Description

வீட்டிலேயே முகம் பொலிவு காண்பது எப்படி பெண்கள் தன் முக அழகுக்காக பல ஆயிரங்களை செலவு செய்து கடைகளுக்கு சென்று முகப்பொலிவு களைப் பெற்று வருகிறார்கள் ஆனால் இவை அனைத்துமே மிகவும் குறைந்த நேரத்தில் வீட்டிலேயே செய்து தனக்குத்தானே முக பொலிவை பெற செய்யலாம் இதனால் நமக்கு பணம் மட்டுமல்லாமல் நேரமும் மிச்சம் ஆகிறது அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்னவென்றால் முதலில் முகத்தை சுத்தமாக்க வேண்டும் அதற்கு நாம் கொதிக்க விடாத பாலை கொண்டு நம் முகத்தை துடைக்கவேண்டும் நம் முகத்தை ஒரு பஞ்சினால் துடைப்பது நல்லது பின்பு தேனையும் அரிசி மாவையும் சர்க்கரையையும் ஒன்றாக கலந்து முகத்தில் தேய்க்கவேண்டும் இதன் மூலமாக நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை இது வெளியே கொண்டு வரும் ஐந்து நிமிடம் இதுபோன்ற செய்துவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும் பின்பு ஒரு துண்டினை கொண்டு நன்றாக துடைக்க வேண்டும் அதை தொடர்ந்து கடலைமாவில் ஆளி விதையின் பொடியையும் கலந்து நம் முகத்தில் தடவி விடவேண்டும் 20 நிமிடங்கள் இப்படி தடவினால் நம் முகம் மிருதுவாக மாறுவதை நம்மால் உணர முடியும் பின்பு அரிசி மாவில் மீண்டும் தேனை கலந்து மற்றும் முல்தானி மெட்டி பொடியையும் பட்டைப் பொடியையும் கலக்கவேண்டும் நாம் பட்டைப் பொடியை சிறிது அதிகமாக கலந்து விட்டால் நம் முகத்தில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது பின்பு ரோஸ் நீரை அதில் ஊற்றி கலந்து முகத்தில் தடவ வேண்டும் 10 நிமிடத்திற்கு பிறகு நாம் இதை வெதுவெதுப்பான நீரில் கழுவி பார்த்தால் நம் முகம் பொலிவுடன் இருப்பதை உணர முடியும் இந்த எளிய வழியை நாம் பயன்படுத்தினாலே போதும் எந்த ஒரு விழாக்களுக்கு சென்றாலும் அனைவரும் நம்மையே பார்க்கக்கூடிய அழகு இந்த சிறிய செயல் மூலமாக கிடைக்கும். முக அழகு / வீட்டில் / பணம் / லாபம் / பொலிவு / பெண்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.