ஆரோக்கியமாக வாழ 2 மணி நேரத்திற்கு ஒரு முறை உணவு சாப்பிட வேண்டுமா?

Video Description

மலட்டுத்தன்மையை போக்கும் உணவு ஆண் பெண் இருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை மலட்டுத்தன்மை இதனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் என்பது கிடைக்காமல் போகிறது ஆனால் இதை நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலமாக நாம் மீண்டும் குழந்தை பாக்கியத்தை பெற முடியும் அதற்காக நாம் அதிகாலை காலை என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது பார்த்துவிட்டோம் இப்போது காலைக்கும் மதியத்திற்கும் இடையே நாம் ஏதாவது ஒரு சிறிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு நமக்கு தேவைப்படுவது உணவு தான் ஆனால் இதை மூன்று வேளையாகப் பிரித்து நம் சாப்பிட்டு வருகிறோம் ஆனால் அதை தவிர்த்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவதன் மூலம் நாம் மிக ஆரோக்கியமாக இருக்க முடியும் இதனால் நமக்கு வாய்வுத் தொல்லை எதுவும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்போம் சரியாக காலை 10 மணி முதல் 11 மணி வரை நாம் சிறிய உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் அதிகளவில் பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் பாதாம் பிஸ்தா போன்ற பருப்புகளை உட்கொள்ள வேண்டும் ஏனென்றால் இதுதான் பழங்களை சாப்பிடுவதற்கு சரியான நேரம் நம் உணவு முறையில் மாலை 4 மணிக்கு மேல் எந்த பழங்களையும் சாப்பிட கூடாது அப்படி சாப்பிடுவதினால் நமது உடல் பருமன் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது இந்த சமயங்களில் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் காலை 11 மணி அளவில் நாம் தேர்ந்தெடுக்கும் பழங்கள் சர்க்கரை குறைவாக இருக்கும் பழங்களையே சாப்பிட வேண்டும் ஆப்பிள், மாதுளை, தர்பூசணி, திராட்சை போன்ற பழங்களை சாப்பிடலாம் இதில் நாம் வெள்ளரிக்காய் விதை, பூசணிக்காய் விதை போன்றவற்றையும் இதனுடன் சேர்த்து சாப்பிடலாம் எனவே இது போன்ற ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் நம் உடல் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமடையும் இதனால் மலட்டுத்தன்மை நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் / ஆரோக்கியம் / மலட்டுத்தன்மை / குழந்தை / ஆண்-பெண் / குடும்பம் சிக்கல் / தீர்வு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.