வீட்டில் தங்கம் சேருவதற்கு பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்.!

Video Description

வீட்டில் மகாலட்சுமி இருந்தால்தான் செல்வம் செழித்து இருக்கும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு .எனினும் சில பரிகாரங்கள் மூலமாக நாம் வீட்டில் தங்கத்தை சேர்த்துவிடலாம். செவ்வாய்க்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் ஒரு பித்தளை கூடத்தில் துவரம்பருப்பு அரிசி கொண்டக்கடலை இவை மூன்றையும் சம அளவில் நிரப்பிக்கொள்ள வேண்டும். அந்த குடத்தின் மேல் ஒரு தேங்காயை கவிழ்த்து வைக்க வேண்டும். பிறகு குடும்பத்தாருடன் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று சுவாமியின் முன் குடத்தை வைத்து அபிஷேக ஆராதனைகள் செய்தல் வேண்டும். அர்ச்சகரிடம் சுவர்ண தோஷம் நீங்க செவ்வாய் கிரக பூஜா தானம் என்று கூறி அவரை பெற்றுக் கொள்ளும்படி கூறி அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர வேண்டும். பிறகு கடலையை அவித்து தானம் செய்ய வேண்டும் இப்படி பரிகாரம் செய்து வந்தால் வீட்டில் தங்கம் செலுத்தி நிலையாகத் தங்கும். புதிதாக தங்கம் வாங்கிய உடன் அதை ஒரு வெள்ளைத்துணியில் அல்லது வெள்ளைக் காகிதத்தில் மடித்து சிறிது நேரம் உப்பில் புதைத்து வைத்தால் தங்கத்தில் உள்ள தோஷங்கள் விலகும் .இதனால் வீட்டில் தங்கம் அதிகளவு சேரும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.