நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிப்பது உடம்பிற்கு நல்லது?

Video Description

ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ஆரோக்கியமான வாழ்விற்கு நமக்கு உடம்பில் அதிக அளவு தண்ணீர் எடுக்க வேண்டும் எப்போது உடம்பில் நீர் சக்தி குறைகிறதோ அப்போது நாம் சோர்வடைய ஆரம்பிப்போம் இதனால் நமது இரத்த ஓட்டங்கள் மெதுவாக செல்வதினால் நமக்கு இருதய நோய் வருவதற்குக் கூட அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது இதனால் நாம் தினமும் இரண்டரை லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும் அப்படி குதிக்க தவறினால் நமக்கு வாந்தி மயக்கம் போன்றவைகள் ஏற்படும் பொதுவான உடல்நல கோளாறு இருப்பவர்களுக்கு அதிகளவு நீர் வெளியேறும் வாய்ப்புகள் இருக்கிறது அதே போன்று தான் கோடை காலத்தில் நம் உடம்பில் இருந்து நீர் அதிகளவில் வெளியேறும் இந்த சமயங்களில் நம் உடலுக்கு அதிகமாக நீர் தேவைப்படும் இதனால்தான் நமது இரத்த ஓட்டங்கள் பெரிதாக பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது இதைத் தவிர்த்து உடம்பின் தொற்றுகளும் ஏற்படும் நாம் தண்ணீரை சரியான அளவு அவ்வப்போது குடிக்க வேண்டும் நாம் குளிப்பதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை குடிப்பதினால் நம் உடம்பில் இருக்கும் நச்சிகளை வெளியேற உதவுகிறது அது மட்டுமல்லாமல் நம் இதயத்திற்கு வலு சேர்க்கிறது நாம் உணவு அருந்துவதற்கு முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதனால் நமது உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவும் அது மட்டுமல்லாமல் நமக்கு காலையில் ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவுகிறது இதனால் குடிநீரை சரியான அளவு சரியான நேரத்தில் குடிப்பதினால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. குடிநீர் / நேரம் / தினமும் / இரண்டரை லிட்டர் / உடல் / ஆரோக்கியம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.