தண்ணீரை இப்படி குடித்தால் உங்கள் ஆயுள் இருமடங்காக நீடிக்கும்..!

Video Description

நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடியதுதான் இந்த நீர் விரதம். இது உடலின் மெட்டபாலிசத்தை மீட்டமைக்க மிக சிறந்த வழியாகும். ஒருவர் நீர் விரதம் இருப்பதன் மூலம் உடல் சுத்தமாகும். எடை குறையும் மற்றும் இரத்த அழுத்தமும் குறையும். ஆனால் நீர் விரதத்தை மேற்கொள்வதால் நன்மைகள் கிடைப்பது போன்று சில தீமைகளும் உள்ளது. நீர் விரதம் இருப்பதன் மூலம் நமது ஆயுள் அதிகமாகும் என்பதை பற்றி இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். நீரை மட்டுமே குடித்து இருப்பதுதான் நீர் விரதம் எனப்படும். அப்படி தண்ணீரை மட்டுமே குடித்து விரதம் இருப்பதால் ரத்த அழுத்தம் குறையும். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீர்விரத்தை மேற்கொண்டார் உட்கொள்ளும் கலோரிகளின் அளவு குறையும் .இதன் விளைவாக உடல் எடை மிக வேகமாக குறைந்து வரும். அத்தோடு பல வகையான இதய நோய்களின் அபாயமும் குறையும். அடிக்கடி விரதம் இருப்பது உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் மற்றும் இன்சுலின் போன்ற வளர்ச்சிகளின் அளவுகள் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் .பொதுவாக உடல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளக் கூடியது .எப்போதும் உடலை செய்ய முடியவில்லையே அப்போது உடலில் நச்சுத்தன்மை அளவு அதிகரித்து புற்றுநோய் போன்ற மிகப்பெரிய நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடும். இன்சுலின் மற்றும் லெப்டின் ஹார்மோன்கள் தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைப்பது மற்றும் பசி உணர்வை தூண்ட காரணமாக இருப்பவை. விரதம் இருப்பதால் உடலில் இன்சுலின் சென்சிடிட்டிவிட்டி அதிகரித்து சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் அபாயம் குறையும். நீர் விரதத்தை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மேற்கொள்வது மிகச் சிறந்தது. இந்த விரதத்தின்போது வெறும் தண்ணீரை மட்டுமே பருக வேண்டும் இந்த விரதத்தை ஒருவர் 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை மேற்கொள்ளலாம் .விரதத்தை முடிக்கும் போது ஒருவர் வயிறு நிரம்ப சாப்பிடக்கூடாது முதலில் மிதமான அளவில் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். முக்கியமாக நீர் விரதத்தின் போது நீரை எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம் இதன் மூலம் உங்களின் ஆயுள் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.