அதிக சத்துக்களை கொண்ட டிராகன் பழம்..!

Video Description

டிராகன் பழத்தின் மகிமை நம் உடல் ஆரோக்கியத்திற்காக பழங்களை தவிர்த்து பழங்ச்சாறுகளை குடித்து வருகிறோம் ஏனென்றால் இதை அருந்துவது என்பது மிகவும் எளிது அதுவே பழங்களை நாம் கடித்து உண்ண வேண்டும்என்றால் அது நம் முகம் மற்றும் ஆடைகள் மேல் இதன் சாறு பட வாய்ப்புகள் உள்ளது அதை தவிர்த்து அதை துண்டு துண்டாக நறுக்கி சாப்பிடுவோம் இது சற்று நமது வேலையை அதிகரித்துவிடும் இதனால் நாம் பழரச கடைகளுக்கு சென்று பழச்சாறுகளை அருந்தி வருகிறோம் அப்போது நம் கண்ணில் தோன்றும் ஒரு வண்ணமான ஒரு பழம் தான் டிராகன் பழம் இதை நாம் பார்த்திருப்போம் ஆனால் இதன் சுவை மற்றும் இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் எதுவும் தெரியாமல் இதை தவிர்த்து இருப்போம் ஆனால் இந்த பழத்தில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கின்றன டிராகன் பழங்களில் மூன்று வகைப்படுகிறது ஒன்று மேல் தோல் சிகப்பு நிறமாகவும் பழமும் சிகப்பாகவும் இருக்கும் மற்றொன்று மேல்தோல் சிகப்பாகவும் பழம் வெள்ளை நிறமாகவும் இருக்கும் மூன்றாவதாக மேல்தோல் மஞ்சள் நிறமாகவும் உள்ளிருக்கும் பழம் வெள்ளை நிறமாகவும் இருக்கும் இதில் கரு நிறத்தில் கொட்டைகள் இருக்கின்றன இது நமது உடல் செரிமானத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் இதை தவிர்த்து இந்த பழங்களை ஒயின் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள் இதன் இலைகளை நாம் தேநீர் போட்டு குடிக்கலாம் இதில் அதிக அளவு நார்சத்து இருப்பதால் நமது உடல் எடை குறைகிறது இது நமது உடம்பில் இருக்கும் கொழுப்புகளை வரவிடாமல் தடுக்கிறது இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால் நமது உடலில் இது பலம் சேர்க்கிறது நம் உடலில் இருக்கும் கட்டிகளை போக்கி புற்றுநோய்க்கு எதிராக இது போராடுகிறது எனவே டிராகன் பழங்களை வாங்கி சாப்பிடுவது நல்லது. டிராகன் / பழம் / ருசி / ஆரோக்கியம் / மருத்துவம் / இருதயம் / புற்றுநோய் / தேனீர்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.