காவிரித் தாயை சிறைப்பிடித்த அகத்தியர்! காப்பாற்றியவர் யார் தெரியு

Video Description

காவிரி நதியின் பிறப்பிடமாக இருக்கும் கர்னாடகத்தில் தலைக்காவிரி பிரம்மகிரி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. இங்கு காவிரியும், கன்னிகா நதியும், கண்ணுக்கு தெரியாத ஜோதி நதியும் சங்கமிப்பதால் இது ‘திரிவேணி சங்கமம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அகத்தியரால் கமண்டலத்தில் சிறை பிடிக்கப்பட்ட காவிரி நதி காக்கை உருவில் வந்த விநாயகரால் விடுவிக்கப்பட்டு இங்குள்ள பகுதிகளில் ஓடியதாக புராண வரலாறுகள் கூறுகிறது. இங்க காவிரி தாய், அகஸ்தியர் மற்றும் விநாயகர் ஆகியோருக்கும் கோவில்கள் உள்ளன. அதே மாதிரி அங்கிருக்கிற சிவன்கோவிலில் பழமையான சிவலிங்கம் இருக்கிறது. மேலும் இந்த இடம் அகஸ்தியருக்கு, சிவபெருமான் காட்சி அளித்த இடமாகவும் கருதப்படுகிறது. எனவே இங்குள்ள கோவில் அகஸ்தீஸ்வரர் கோவில் என அழைக்கப்படுகிறது. கர்னாடகாவில் மடிகேரியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில் தலைக்காவிரி அமைந்து உள்ளது. இதேபோல் இங்கு 11-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட பாகண்டேஸ்வரா கோவிலும் உள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.