தேனை எப்படி எதனுடன் கலந்து சாப்பிட்டால் நல்லது தெரியுமா?

Video Description

தேனில் பல வகைகள் உள்ளது கொம்பு தேன் மலைத்தேன் மரப்பொந்து தேன் மனைத்தேன் புற்றுத்தேன் என பலவகை கேன்கள் மருத்துவ குணங்களை நமது சித்தர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள் மலைகளில் கிடைப்பதுதான் இதுவே மிகச்சிறந்த இதில் தான் அதிக அளவு மருத்துவ குணம் உள்ளதாக கூறுகிறார்கள். தேனின் மருத்துவ குணங்கள் உள்ள பல நிலையில் தேனுடன் எதைக் கலந்து சாப்பிட்டால் நல்லது என்பதை இந்த வீடியோ வாயிலாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் வயிற்றுக் காந்தல் அல்சர் குறையும். கேரட்டை மிக்ஸியில் சார் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை குறையும். இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் பித்தம் குறையும். மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்கும். ஒரு வயது தாண்டிய குழந்தைகளுக்கு தினமும் ஒரு ஸ்பூன் தேன் கொடுத்து வந்தால் நல்ல பசி எடுக்கும். இரண்டு ஸ்பூன் தேனோடு மூன்று ஸ்பூன் கிராம்புத்தூள் டீயுடன் கலந்து குடித்தால் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் குறையும். தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தொடர்ந்து பருகி வந்தால் கண் பார்வை விருத்தியடையும். தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல் ,தொண்டை வலி, மார்பு சளி ,மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு இருந்து நிவாரணம் கிடைக்கும். அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும் . ஒரு தேக்கரண்டி அளவு பூண்டுச் சாறுடன் 2 தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிடுவதால் ரத்த கொதிப்பு நீங்கும் . இரவில் உறங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல ஞாபக சக்தி உண்டாகும். தேன் மற்றும் பார்லி வேகவைத்த நீரும் கலந்து குடித்தால் மலச்சிக்கல் வயிற்றுப் பொறுமல், இரைப்பு, இருமல், ஜலதோஷம் தொண்டைகட்டு, தொண்டைப்புண் ஆகியன குணமாகும். தேனும் கருத்தோடும் கலந்து பல் துலக்கினால் பற்கள் பளிச்சிடும். முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் இந்த தேனை தடவி விட்டு பிறகு தண்ணீரால் முகத்தை கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கும். காயங்களின் மீது தடவினால் விரைவில் குணமடையும் குறிப்பாக தீப்பட்ட புண்களில் தேனை தடவினால் மிக விரைவில் ஆறும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.