ராஜஸ்தானில் உள்ள எலி கோவில் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Video Description

கர்ணி மாதா எலி கோவில் எலிகள் என்றாலே அருவருப்பும் பயமும் நமக்கு ஏற்படும் அப்பேர்ப்பட்ட எலிகளுக்கு இடையில் ஒரு கோவில் உள்ளது அந்த கோவிலின் பெயர் தான் “கர்ணி மாதா கோவில்” இதை எலி கோயில் என்றும் அழைக்கிறார்கள் கர்ணி மாதா என்பவர் 150 வருடங்களாக வாழ்ந்த கடவுள் ஆகும் இவர் இறந்த பின் எலியாக மாறி இந்த கோவிலில் இருக்கிறார் என்ற கதை உள்ளது. எலிகளை கடவுளாக பார்க்கப்படும் இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. எலி நோய்கள் வரும்போது கூட இந்த கோவிலில் உள்ள எலிகளுக்கு எந்த நோயும் இல்லை இது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருந்தது அது மட்டுமல்லாமல் இங்கு வரும் மக்கள் எலிகளுக்கு பல வகையான உணவுகள் காணிக்கையாக செலுத்துகிறார்கள் பால், நொறுக்குத்தீனிகள் போன்றவையும் அடங்கும். இந்த கோவிலில் உள்ள எலியை தற்செயலாக காயப்படுத்தினால் அவர்களுக்கு பரிகாரமாக ஒரு எலி சிலையை தங்கத்தால் செய்து உண்டியலில் காணிக்கை போடா வேண்டும். இந்த கோவிலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கருப்பு எலி உள்ளது ஆனால் ஒரே ஒரு வெள்ளை எலி இருக்கிறது. அந்த எலியை பார்த்தால் மிகவும் அதிர்ஷ்டம் என்கிறார்கள் ஆகவே அந்த எலியை பார்பதர்க்கு தினமும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் இருக்கிறார்கள. ராஜஸ்தானில் “தேஷ்நோக்” என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்து இருக்கின்றது. இந்த கோவிலுக்குள் எல்லாம் கோயிலைப் போல் காலணிகள் அணியாமல் நடக்கவேண்டும் தற்செயலாக ஏதாவது எலியை மிதித்தாள் அது பாவமாகும், உங்கள் கால் மேல் எலி ஏறிச் செல்வதை நம்மால் காண முடியும். இந்த கோவிலில் வருடத்திற்கு இரண்டு முறை திருவிழா காலத்தில் பூஜைகள் செய்யப்படுகிறது. முதல் பூஜை மகாசிவராத்திரி அதாவது மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது அதைத் தொடர்ந்து அக்டோபர் செப்டம்பர் மாதம் இரண்டாம் பூஜை நடக்குமாம் ஒட்டகங்களுக்கு பிரசித்தி பெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் எலிகளுக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள. கர்ணி மாதா கோவில் / ராஜஸ்தான் / எலி கோவில் / தங்கம் / காணிக்கை / தேஷ்நோக் / 150 வயது

@@include("partials/call_to_action.html") @@include("partials/footer.html") @@include("partials/base_scripts.html")