இயற்கையான பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் ஆடைகள்..!

Video Description

ஆடைகள் என்பது மனிதனின் ஒரு இன்றியமையாத தேவையாக உள்ளது .இயற்கை பொருட்கள் மூலம் பழங்காலத் தில் ஆடைகள் உருவாக்கப்பட்ட வந்தது .பின்னர் அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணத்தால் செயற்கை இழைகள் ரசாயன பொருட்கள் ஆதிக்கத்தில் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டது .இந்த செயற்கை மற்றும் ரசாயன பொருட்கள் கலந்த ஆடைகள் நம் உடம்புக்கு மட்டும் அல்ல நம் சுற்றுப்புறத்தையும் பாதிக்கும் படி உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் நமது சுற்றுப்புறமும் மாசு அடைகிறது. ஆடை தயாரிப்பில் இயற்கையோடு இணைந்த ஆர்கானிக் ஆடைகளை உற்பத்தி செய்தால் இதன் பாதிப்புகளில் இருந்து நாம் தப்பிக்கலாம் . தற்போது உலக அளவில் ஆர்கானிக் ஆடைகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது .அதுமட்டுமல்ல ஆடைகளின் தரம் உறுதி உருவாக்கம் போன்றவற்றை நிர்ணயம் செய்து ஆடை தயாரிப்பு உலகளவில் ஆர்கானிக் முறையில் மேற்கொள்கிறார்கள்.ஆடை உருவாக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ரசாயன முறைகளை பின்பற்றாமல் முற்றிலும் இயற்கையைச் சார்ந்த பொருட்களை கொண்டே உருவாக்கப்படுகிறது. அவற்றின் மதிப்பு சற்று அதிகம் என்றாலும் உடல் நலத்திற்கும் சுற்றுப்புறத்திற்கு தீங்கு இழைப்பதில்லை. இயற்கை நூலிழைகள் என்பது சிறிய பருத்தி நூல் இழைகளை பிரதான இடம் பிடிக்கின்றன .அதிலும் குறிப்பாக பருத்தி உற்பத்தி செய்யப்படும் முறை இயற்கை விவசாயத்தை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். இதற்கென பிரத்தியேகமான ஆர்கானிக் பருத்தி விளைச்சல் முறை பயன்பட்டு நூலிழைகள் உருவாக்கப்படுகிறது. இதற்கு மானாவாரி பருத்தி மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தான் பயன்படுகிறது. மேலும் இதற்கு நீர்ப்பாசனம் என்பது மழையை நம்பி மட்டுமே உள்ளது. எதிர்காலத்துக்கு பயன்படும் தண்ணீரை நாம் இந்த விளைச்சலுக்கு பயன்படுத்தி வீணாக்குவது இல்லை. நம் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்த நிலையில் ஜவுளி தொழில் உள்ளது. இந்த தொழிலில் தற்போது எந்திரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்ததால் வேலையில்லா திண்டாட்டம் கிராமப்புற மக்களை மட்டுமல்ல நகர் சார்ந்தவர்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.அதனை தடுக்கும் விதமாக காந்தி கூறிய காதி ஆடை அணிவதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தையும் வீட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும். 100% ஆர்கானிக் விவசாயம் மூலம் பயிர் செய்யப்படும் பருத்திக்கொண்டு நூலிழை தயாரிக்கப்படுகிறது இந்த நூலிழைகள் கலப்பில்லாத சாயம் ஏற்றப்படுகிறது. இதற்கென செடிகள் பழங்கள் தலைகள் போன்றவற்றிலிருந்து வண்ணங்கள் பிரித்தெடுக்கப்பட்டு இயற்கையான முறையில் பருத்தி நூல் இழைகள் சாயம் ஏற்றப் படுகிறது பெரும்பாலும் நூல்களில் சாயம் ஏற்றுதல் முறைகள் தான் அதிக ரசாயனம் பயன்படுத்துவதுடன் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றுப் படுகைகளிலும் சுற்றுச்சூழலையும் மாசு ஏற்படுத்தும். இதனை கருத்தில் கொண்டு இயற்கை சார்ந்த பொருட்களின் மூலம் சாயம் ஏற்றுதல் சுற்றுச்சூழலில் மாசு குறைகிறது என்பதில் ஐயமில்லை.ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்கும் ஆர்கானிக் ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த ஆர்கானிக் ஆடை கள் தனிப்பட்ட முறையில் முத்திரையிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் தான் ஆர்கானிக் ஆடைகள் தயாரிக்க படுகிறது இதில் புடவைகள் ரூபாய் ரூ 300 முதல் 4000 வரையும் ஆர்கானிக் சட்டைகள் ரூ 800 முதல் 1500 வரை கோரா காட்டன் புடவைகள் ரூ 1000 முதல் 5000 வரை சுங்குடி சேலைகள் ஆயிரம் முதல் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்கானிக் துணி ரகங்களின் விலை சற்று அதிகம் என்றாலும் அவை நம் உடல் நலத்தையும் நமது சுற்றுப்புறத்தையும் பாதுகாக்கும் என்பதை உணர்ந்து கொண்டால் அதன் விலை நமக்கு ஒரு பெரிதாக இருக்காது. நான் விரும்பி காதி சட்டை அணியும் போது அது பலரின் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் கொடுக்கும். கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலை பாதுகாக்க காஞ்சிபுரம் ஆரணி ஈரோடு உள்பட பல இடங்களில் தயாராகும் துணி ரகங்கள் மற்றும் ஆடைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம். எனவே இயற்கை முறையில் மானாவாரி பருத்தி பயிர் செய்து அதன் மூலம் நாம் ஜவுளித் துறையில் முன்னேற்றம் அடைந்தால் அது நம் வீட்டுக்கு மட்டுமல்ல நாம் சுற்றுப்புறத்திற்கு தீங்கு அளிக்காது என்பது உண்மைதானே.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.