சென்னை அடையாறில் இப்படி ஒரு தீம் ரெஸ்டூரண்ட் இருக்கா?

Video Description

அடையார் ரெயின் ஃபாரஸ்ட் தீம் ரெஸ்டாரன்ட் நாம் சுற்றுலாவுக்கு செல்வதற்கான காரணம் அங்கு நாம் காணாத சில பொருட்களை காண்பதற்காகதான் இதை தவிர்த்து சிறுவர்களுக்காக நாம் எம்ஜிஎம் விஜிபி என விளையாட்டு திடலுக்கு சென்று வரும் காரணம் அங்கு அமைந்திருக்கும் விதவிதமான கட்டிடங்கள் மற்றும் விளையாடுவதற்கு ஏதுவான இடங்கள் இருக்கும் ஆனால் நாம் உணவகத்திற்கு சென்றால் அங்கு சாதாரணமாக வண்ண விளக்குகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட பொருட்கள் இருக்கும் ஆனால் சென்னை அடையாறில் அமைந்திருக்கும் ரெயின் ஃபாரஸ்ட் உணவகம் ஒரு புது விதமான தோற்றத்தில் இருக்கின்றன அது என்னவென்றால் இதன் பேரில் இருப்பது போன்று இந்த உணவகத்திற்கு சென்றவுடன் நாம் எதோ காட்டுக்குள் செல்வது போன்ற ஒரு உணர்வை நமக்குத் தரும் இங்கே உள்ளே மற்றும் நுழைவாயிளில் பாறைகள் கொடிகள் மரங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வீழ்ச்சி பறவைகளின் கூடு பூக்கள் என காட்டில் இருக்கும் அனைத்தும் இந்த உணவகத்தில் உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்றன இந்த உணவகத்தில் மேலாளர் குமார் அவர்கள் கூறும் போது இங்கு மேல்மருவத்தூர் மற்றும் கும்மிடிப்பூண்டி என வெகுதூறத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் கூட இதற்காக இங்கு வருகிறார்கள் இங்கு டிராகன் சிக்கன் மற்றும் மட்டன் கறி போன்ற உணவுகள் அதிகளவு விற்பனை ஆகின்றது என்கிறார் இந்த உணவகம் மதியம் பனிரெண்டு மணிக்கு தொடங்கி மூன்று மணிக்கு நிறைவடைகிறது இது தவிர்த்து மாலை 7 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நீடிக்கிறது இந்த உணவகத்தில் நம் தொகுப்பாளர் மட்டன் பிரியாணி, கிராண்ட்சிலாம் சிக்கன் ரைஸ், பாஸ்தா, அனைத்து கிரில் உணவுகள் என இதை அனைத்தும் ருசி பார்த்து நல்ல ஒரு அனுபவத்தை பெற்றதாக கூறியிருந்தார் உணவகத்தில் இருக்கும் ஒரு வாடிக்கையாளர் இங்கு விலையும் மலிவாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இந்த கட்டுமானத்திற்கு ஏற்றார்போல் இசையும் இங்கு ஒலிக்கப்படுகிறது இதனால் உண்மையில் காட்டுக்கு நடுவில் அமர்ந்து உண்பது போல் ஒரு உணர்வை இந்த உணவகம் தருகிறது என்று கூறியிருந்தார் இதை தவிர்த்து இவரின் நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் இங்கு வருவதற்கான காரணம் உணவின் ருசிதான் என கூறியுள்ளார் எனவே எங்களின் தனிப்பட்ட அனுபவத்தில் இங்கு உணவுகள் சுவையாகவும் சுத்தமாகவும் நல்லபடியாக பரிமாறுகிறார்கள் எனவே புதுவிதமான ஒரு சூழலில் உணவு அருந்த வேண்டும் என்று நினைப்பவர்கள் அடையாறில் அமைந்திருக்கும் இந்த உணவகத்திற்கு ஒரு முறை வந்து பார்க்கலாம் அதுவே உங்களை மீண்டும் மீண்டும் வரத் தூண்டும். ரெயின் ஃபாரஸ்ட் / காடுகள் / மழை / உணவு / அடையார் / சுத்தம் / வசீகரம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.