பல அறிய பொருட்கள் வாங்க சென்னையின் மோர் மார்க்கெட்..!

Video Description

சென்னை மூர்மார்க்கெட் புதிய பொருட்கள் முதல் பழைய பொருட்கள் வரை வித்தியாசமான மற்றும் புதுவிதமான பொருட்கள் கிடைக்கும் இடம் சென்னை மூர்மார்க்கெட். இதை சென்னை கார்ப்பரேஷன் தலைவராக இருந்த ஜார்ஜ் மூர் அவர்கள் 1898 ஆம் ஆண்டு இதை கட்டுவதற்கான அடிக்கல் நட்டு வைத்தார் இதனால்தான் இவர் பெயரையே இந்த அங்காடிக்கு வைத்துள்ளார்கள். சென்னை மூர் மார்க்கெட்டின் சிறப்பு என்னவென்றால் புதிய மூர் மார்க்கெட் மட்டும் பழைய மூர் மார்க்கெட் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர் இதில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களின் வண்ண மீன்கள் அதிகளவில் புத்தகங்கள் விலைமதிப்பற்ற பழங்காலத்து பொருட்கள் இருக்கின்றன அதுவே பழைய மூர் மார்க்கெட்டில் காணொளியில் பார்ப்பது போன்ற பலவகையான வீட்டு உபயோக பொருட்கள், செல்பேசிகள், வீடு கட்டுவதற்கான பொருட்கள், உடம்பை ஏற்ற இறக்க உபயோகப்படுத்தப்படும் ஆயுதங்கள், பழைய புதிய மின்சார பெட்டிகள் என ஏராளமான பொருட்கள் இங்கே கிடைக்கின்றது. ஏதாவது பொறியாளர்கள் புதுவிதமான கண்டுபிடிப்பு கண்டுபிடிக்க இங்கு அதற்கேற்ப சாதனங்களை தேடிக் கண்டுபிடித்து வாங்கிச் செல்லலாம். இங்கே விலை மிக குறைவாக கிடைக்கிறது வேண்டுமென்றால் நாம் கூட விலையை கேட்கலாம். செல்போன்கள் வெறும் 150 ரூபாய் முதல் ஆரம்பிக்கிறது இந்த மூர் மார்கெட் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் இங்கு புதிய பொருட்கள் கூட கிடைக்கிறது அந்தப் பொருட்கள் நம் வாங்க வேண்டுமென்றால் நம் ஆதார் அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும் இப்படி நல்ல முறையில் இவர்கள் பழைய மற்றும் புது பொருட்களை விற்கிறார்கள். மோர் மார்க்கெட் / பழைய / புதிய / பொருட்கள் / சென்ட்ரல் / ரயில் நிலையம் / பொறியாளர்கள் / வீட்டு உபயோக பொருட்கள் / குறைந்த விலை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.