பழங்கால பொருட்களுக்கு பெயர் போன பிரபல மார்க்கெட் - ஷாப்பிங் சகி

Video Description

அரிய வகை பொருட்களுக்கு சென்னை மூர்மார்க்கெட் மக்களுக்கு எப்பொழுதும் ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாகி இருப்பார்கள் ஒரு சிலரோ தேவையற்ற போதைகளுக்கு அடிமையாகி தன் வாழ்க்கையை அழப்பார்கள் ஆனால் மறு சிலரோ அரியவகை பொருட்களைச் சேர்ப்பதில் மற்றும் அதை பராமரிப்பதில் அடிமையாக இருப்பார்கள் இப்படிப்பட்ட பொருட்களை சேகரிப்பதற்கான ஒரு அருமையான இடம் சென்னை மூர் மார்க்கெட்டில் இருக்கிறது இங்கு பழங்காலத்து பொருட்கள் முதல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் இங்கே கிடைக்கிறது மூர் மார்க்கெட்டில் அமைந்திருக்கும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் இந்த கடை உள்ளது இதை கடை என்று கூறாமல் ஒரு பழங்கால அருங்காட்சி என்றே கூறலாம் உதாரணத்துக்கு இங்கு நாம் பயன்படுத்திய அனைத்து நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் கிடைக்கின்றது. இதை கடையின் உரிமையாளர் “சூசைராஜ்” இங்கு கிட்டத்தட்ட 10 வருடங்களாக கடை நடத்தி வருகிறார் இதற்காக கடந்த 15 வருடத்திற்கு மேல் இந்த அரிய வகைப் பொருட்களை சேகரித்து வந்துள்ளார் இதில் இவருக்கு போதுமான அளவை தாண்டி இருக்கும் பொருட்களையே இவர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார் இங்கு அதிக அளவில் பழங்கால கை கடிகாரங்கள் மற்றும் நாணயங்கள் கிடைக்கின்றன. இங்கு இவருக்கு வாடிக்கையாளர்கள் எப்போதாவது ஒரு முறைதான் வருகிறார்கள் ஆனாலும் இவர் இதை லாபத்திற்காக செய்யாமல் ஏதாவது புது விதமான வழியில் இதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் இந்த கடையை நடத்தி வருகிறார் இவர் கைவசம் முப்பரிமான புகைப்பட கருவி, ஓலைச்சுவடிகள், 400 வருடங்களுக்கு பழமையான எழுத்தாணிகள், கிட்டத்தட்ட 12000 கோடி பழமையான பாசில் மற்றும் மரத்துண்டுகளை இவர் சேகரித்து வைத்துள்ளார். இவர் சிறு வகை சிற்பங்கள் வைத்துள்ளார் இங்கு வந்து பார்ப்பவர்கள் தன் காலத்தை பின்னோக்கி பயணித்து வந்தது போலிருக்கிறது என்று கூறிவருகிறார்கள் உங்களுக்கும் இது போன்ற ஒரு புதிய அனுபவம் வேண்டுமென்றால் ஒருமுறை இந்த இடத்தை வந்து பாருங்கள். அரிய வகை / பொருட்கள் / சென்னை / மூர்மார்க்கெட் / பழங்காலம் / கடிகாரம் / புகைப்பட கருவி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.