உங்கள் காதல் பர்பெக்ட்டான காதலானு செக் பண்ணுங்க..!

Video Description

காதல் என்பது விசித்திரக் கதை அல்ல. உங்களுடனேயே உங்களை நேசித்த வண்ணம் ஒருவர் அமைவது என்பது மிகவும் அரிய ஒன்று. அப்படி அமைந்துவிட்டால் அதைவிட சொர்க்கம் வேறு எதுவும் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ நீங்கள் விருப்பப்பட்டால் இந்த வழிகளை கடைபிடித்தாலே போதுமாகும். உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய இந்த ரகசியங்களை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் வாழ்க்கை முழுமை அடையும். முதலில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் எப்போதும் உண்மையானவர்களாக இருங்கள் உண்மையான அன்பை செலுத்துங்கள். உங்களை அவர் நேசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் நீங்கள் அவரை நேசியுங்கள். வேறு ஒருவருக்காக அந்த விஷயத்தை செய்யாதீர்கள். நீங்கள் உண்மையாக இருங்கள் எனவே நீங்கள் அவரின் நம்பகத்தன்மைக்கு தயாராகி விடுவீர்கள். விட்டுக்கொடுத்து வாழுங்கள் விவகாரங்களை ஏற்படாது. சுயமாக எதையும் யோசித்து முடிவெடுங்கள். உங்க கணவருக்கு தேவையானவற்றை நீங்கள் பார்த்து பார்த்து செய்யும்போது அவர்களுக்கு உங்கள் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். நீங்கள் அன்பை பெற விரும்பினால் முதலில் அந்த அன்பை அவரிடம் கொடுங்கள் நீங்கள் எவ்வளவு அதிகமாக அன்பை கொடுக்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அவரிடம் இருந்து அன்பை பெறுவீர்கள். தொடுதல் என்பது அன்பின் மிகச் சக்தி வாய்ந்த வெளிப்பாடுகள் ஒன்றாகும். உதடுகள் நாம் உடல் மற்றும் உணர்ச்சி நிலைகளை மாற்றி அன்பை அதிக வரவேற்பை பெறுகிறது. சந்தேகத்தை விட்டொழித்து சண்டையிடாமல் வாழ்வது. தங்களின் வேலைகளை பகிர்ந்து செய்வது உற்சாகமாக எப்போதுமே யாரிடமும் அவர்களை விட்டுக் கொடுக்காமல் நடப்பது.இருவரும் விருப்பத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஆழமான தூக்கம் உறங்கும் வரை பேசி சிரித்தல் ஆதரவாக இருத்தல் அணைத்துக் கொள்ளுதல் அதிக அக்கறையுடன் பேணுதல். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடத்தல் இவையெல்லாம் உண்மையான காதலை சொல்லும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.