#சந்திராயன்2- கண்ணீர் விட்ட சிவன்..சமாதானம் செய்த மோடி..என்ன நடந்

Video Description

வருத்தப்பட்ட இஸ்ரோ தலைவர் தட்டிக் கொடுத்த பிரதமர். விண்கலத்திற்கு விண்கலம் அனுப்புவதில் இந்தியா தலை சிறந்து வருகின்றன அதற்கு எடுத்துக்காட்டாக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவப்பட்டது. இந்தியா நிலவை சுற்றி ஆய்வு மேற்கொள்ளும் இரண்டாவது விண்கலம் இதுவாகும். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து 2019 ஜூலை 22 அன்று நிலவை நோக்கி ஜிஎஸ்எல்வி மார்க் 3 இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுலவி ஆகியவை உள்ளடங்கி இருந்தன, இவை அனைத்துமே இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்தது இதன் கடைசி கட்டமாக நிலாவில் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் விண்கலம் செப்டம்பர் 7ம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு தரை இறங்கத் தொடங்கியது. தரையிறங்கும் செயல்பாட்டின் முதல் பகுதி வெற்றிகரமாக முடிந்த பிறகு விண்கலம் தரையிறங்கும் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது அதிகாலை 1.55 மணியளவில் விண்கலத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை நிலவின் தரையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் பொழுது அதனுடன் தகவல் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ தலைவர் சிவன் பெரும் வருத்தத்தை தெரிவித்து இருந்தார் அது மட்டுமல்லாமல் அவர் கண் கலங்க தொடங்கிவிட்டார் இதை நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், அவர்களை தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். இப்போது நிலவரப்படி விக்ரமை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளது அதுமட்டுமல்லாமல் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரம் ஆகக் குறைத்து விக்ரமை புகைப்படம் எடுக்கத் தொடங்கியுள்ளது தட்டிக் கொடுத்த பிரதமர் / சந்திரயான்-2 / இஸ்ரோ தலைவர் சிவன் / தகவல் துண்டிக்கப்பட்டது

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.