பெண்கள் தர்பணம் செய்யலாமா? உண்மை என்ன?

Video Description

இறந்தவர்களுக்கு பெண்கள் தர்பணம் செய்யலாமா? நாம் அதிகமாக தெரிந்து கொண்ட பல விஷயங்களில் ஒரு சில விஷயங்கள் இன்றும் நமக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது, அந்த வகையில் பெண்கள் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாமா என்பது தான். இதற்கு நமது ஜோதிடர் என்ன கூறுகிறார் என்றால் இது செய்வது தவறில்லை ஆனால் இது யாருக்கு செய்கிறோம் என்பதை பொறுத்துதான் இது செய்யலாமா வேண்டாமா என்பது தெரியும், என்கிறார். அதாவது ஒரு பெண் தனக்கு வாரிசுகள் ஏதும் இல்லாத பொழுது தன் கணவர் இறந்திருந்தால் அவருக்கு தர்ப்பணம் செய்யலாம் அதே பெண் தன் கணவர் இல்லாத பொழுது தன் மகன் இறந்த நிலையில் அவருக்கு தர்ப்பணம் செய்யலாம் இதை தவிர்த்து வேறு யாருக்கும் அவர்கள் செய்யக் கூடாது இது மகாலய அமாவாசை அன்று மட்டும் தான் செய்ய முடியும் மற்ற அம்மாவாசையில் செய்வது தவறானதாகும் இது கருணையின் அடிப்படையில் அதாவது காருண்ய அடிப்படையில் செய்யப்படுவதால் ஆத்மா சாந்தி அடைவது மட்டுமல்லாமல் நமக்கு அதிகளவு ஆசீர்வாதங்களும் கிடைக்கும். மஹாலய அமாவாசை / தர்ப்பணம் / பெண்கள் / காருண்யம் / ஜோதிடர் / சாமி

@@include("partials/call_to_action.html") @@include("partials/footer.html") @@include("partials/base_scripts.html")